Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கொழும்பில் 25 வருடங்களுக்கு முன்னர் குண்டுவெடிப்பொன்றில் பின்னர் காணாமற்போன யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த எஸ்.வைரவநாதன் (தற்போது வயது 53) சிறை மீண்டும் சொந்த இடம் திரும்பியுள்ளார்.

சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் தொழில் நிமித்தமாக கொழும்பு சென்றிருந்த போது இடம்பெற்ற குண்டுவெடிப்பை அடுத்து அவர் காணாமல் போயிருந்தார்.

அவரை தொடர்ந்தும் தேடி வந்த பெற்றோர் முதுமையடைந்த நிலையில் மரணமாகினர். இந்நிலையில் அம்பாந்தோட்டை புனர்வாழ்வு நிலையத்தில் எஸ்.வைரவநாதன் இருக்கிறார் எனக் கூறி அவரை அழைத்துச் செல்லுமாறு கடிதம் ஒன்று அவரின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் உறவினர்கள் எஸ். வைரவநாதனை அழைத்து வந்தனர்.

எந்தவித விசாரணைகளுமின்றி தமிழ் அரசியல் கைதிகள் பல ஆண்டுகளாக சிறைகளில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விடுதலை தொடர்பில் தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வந்த போதிலும் அரசாங்கம் எந்தவித நடவடிக்கைகளையும் எடுத்திருக்கவில்லை.

28 வயது இளைஞராக கொழும்பில் காணாமற்போன எஸ்.வைரவநாதன் தன்னுடைய வாழ்க்கையின் பெரும் பாகத்தை சிறைகளிலும், தடுப்புக்காவலிலும் கழித்துள்ள நிலையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். அவர் தன்னுடைய எதிர்காலம் குறித்த மிகவும் அச்சத்துடனேயே எதிர்காலத்தைக் கழிக்க வேண்டியிருக்கும். இப்படியான நிலையிலேயே, தமிழ் அரசியல் கைதிகள் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to கொழும்பில் 25 வருடங்களுக்கு முன்னர் காணாமற்போன யாழ்வாசி சிறை மீண்டார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com