நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கொண்டிருக்கிறார்கள் என்று அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆனாலும், ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பிலான தீர்மானம் எதுவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இன்னமும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மருத்துவ பரிசோதனைகளுக்காக இந்தியா சென்றிருக்கின்றார். அவர், விரைவில் நாடு திரும்புவார். அதன் பின்னரே தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.
இதனிடையே, பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இரகசிய ஒப்பந்மொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்