சட்டப்பேரவையில் தமக்கு இருக்கை வசதி செய்து தரப்படவில்லை என்பதால் பேரவை நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
சட்டபேரவையைக் கூட்டவில்லை என்று மு.கருணாநிதி அவ்வப்போது கூறிவந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், சட்டபேரவையைக் கூட்டினால் கருணாநிதி சட்டப்பேரவைக்கு வரத்தயாரா என்று கேள்வி எழுப்பியிருந்தார். சட்டப்பேரவைக்கு வரத் தயார் என்றும் தமக்கு இருக்கை வசதி செய்து தர வேண்டும் என்றும் கருணாநிதி கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் இன்று கூடிய சட்டப்பேரவைக் கூட்டத் தொடருக்கு கருணாநிதி வந்திருந்தார். ஆனால்,அவருக்குத் தேவையான வசதியான இருக்கை செய்து தரப்படவில்லை.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த கருணாநிதி, தாம் பன்னீர் செல்வத்தை நம்பி வந்ததாகவும், ஆனால், அவர் சரியான இருக்கை வசதி செய்துதர நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளார் என்றும் கூறியுள்ளார். எனவே, அவை நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளாமல் வருகைப் பதிவேட்டில் கையெழுத்துவிட்டு வந்துவிட்டதாகவும் கருணாநிதி கூறியுள்ளார்.

0 Responses to சட்டப்பேரவையில் இருக்கை வசதி செய்து தரப்படவில்லை: மு.கருணாநிதி