சட்டப்பேரவையில் முதல்வர் இருக்கையில் அமராமல் நிதியமைச்சர் இருக்கையில் அமர்ந்தார் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் என்று தெரிய வருகிறது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று உறுதியான நிலையில், அவர் தமது முதல்வர் பதவியை இழந்தார்.பதிலாக நிதியமைச்சராக இருந்த ஒ.பன்னீர்செல்வம் முதல்வரானார். இந்த சூழலில் இன்று தமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. தற்போதைய முதல்வர் பன்னீர் செல்வம் அமைச்சர்கள் இருக்கையிலேயே அமர்ந்தார் என்றும், முதல்வர் இருக்கை காலியாகவே இருந்தது என்றும் தெரிய வருகிறது.
முதல்வர் பன்னீர் செல்வம் முதல்வரானதற்கு தமது வாழ்த்துகளை ஸ்டாலின் நேரில் தெரிவித்துக் கொண்டதாகத் தெரிய வருகிறது. சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த், வருகைப் திவேட்டில் கையெழுத்திட்டு சென்று விட்டதாகவும், அவரது கட்சி எம் எல் ஏக்கள் பேரவைக் கூட்டத்தில் கலந்துக்கொள்கிறார்கள் என்றும் தெரிய வருகிறது.
இன்று சட்டப்பேரவை துணை நிலை நிதி அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டு இரண்டு நாள் அதன் மீதான விவாதம் நடைப்பெறும் என்றும், பின்னர் 8ம் திகதி அன்று முதல்வர் பதில் அளிப்பார் என்றும் தெரிய வருகிறது.

0 Responses to சட்டப்பேரவையில் நிதியமைச்சர் இருக்கையில் அமர்ந்தார் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்