தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் இரத்து செய்து வழங்கிய தீர்ப்புக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் மேன்முறையீடு செய்ய தீர்மானித்துள்ளது.
நடைமுறை ஒழுங்குகளுக்கு அமையவே ஐரோப்பிய நீதிமன்றத்தினால் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாகவும், அதன்மூலம் அந்த இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக பெயரிடுவதோ அல்லது அதன் சொத்துகள் குறித்து மதிப்பீடு செய்வதோ இதன் நோக்கம் அல்லவெனவும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆட்சேபனைக்கு உட்படுத்த ஐரோப்பிய ஒன்றிய பேரவை தீர்மானித்துள்ளது. அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிக்கான நீதிமன்றத்தினால் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் வரை கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இதுபோன்ற தடை நீக்க உத்தரவு வழங்கப்படுவதை தடுக்கும் வகையில் எடுக்கக்கூடிய செயற்பாடுகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைப்புக்கள் ஆராய்ந்து வருவதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Responses to விடுதலைப் புலிகள் மீதான தடை இரத்தை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றியம் மேன்முறையீடு!