கூட்டமைப்பினராகிய நாம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை எதிர்ப்பதுடன், நாட்டில் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்ட ஏனையோருடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளோம். ஆனால், பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பது குறித்தும் நாம் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பிரஜைகள் சக்தி அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டத்திற்கு அறிக்கையொன்றினூடாக விடுத்த செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பொது எதிரணியின் முக்கியஸ்தர்கள் பங்குபற்றிய இந்தக் கூட்டத்தில் பங்குபற்றுமாறு பிரஜைகள் சக்தி அமைப்பு எம்.ஏ.சுமந்திரனுக்கும் அழைப்பு விடுத்திருந்தது. இருப்பினும், கூட்டத்தில் பங்குபற்றமுடியாதமை குறித்து பிரஜைகள் சக்தி அமைப்புக்கு அவர் தெளிவுபடுத்தி அறிக்கையொன்றை அனுப்பி வைத்தார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானத்தை எடுக்கவில்லை. அதனால், இன்று (நேற்று) பிரஜைகள் சக்தி அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்தக் கூட்டத்தில் நான் தனிப்பட்ட முறையில் பங்குபற்றுவது உசிதமானதல்ல. நான் இதில் பங்குபற்றினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது வேட்பாளரருக்கு ஆதரவளிக்கின்றது எனக் காட்ட முயற்சிப்பர் - முயற்சிக்கின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை எதிர்ப்பதுடன், நாட்டில் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்ட ஏனையோருடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளோம். ஆனால், பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பது குறித்தும் நாம் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.
இந்நிலையில், நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க இந்த சக்திகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சில விடயங்களைப் பகிர்ந்துகொள்ளும். அதிகாரப் பகிர்வு விடயத்தில் தமிழ் மக்கள் நாட்டில் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இன்று முழுநாட்டு மக்களும் அதை அனுபவிக்கின்றனர்.
சட்டவாக்கசபை மற்றும் நீதிமன்றத்தின் அதிகாரம் தனியொருவரின் குடும்பத்திடம் உள்ளது. பொருளாதார பிரச்சினை உள்ளதுடன், வாழ்க்கைச் செலவு வானளவு எட்டியுள்ளது. வேலை செய்யும் மக்களின் மீது அசாதாரணமான முறையில் சுமை சுமத்தப்பட்டுள்ளது.
சட்டத்தின் ஆட்சி வீழ்ந்துள்ளது. நாட்டில் ஆட்சி இல்லை. குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் அரசின் உயர் மட்டத்தினரால் பாதுகாக்கப்படுகின்றனர். தற்போது கட்டியெழுப்பப்படுகின்ற ஜனநாயக சக்தியினூடாக நாடு முகங்கொடுத்துள்ள பிரச்சனைக்குத் தீர்வு காண வழி பிறக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம்” என்றுள்ளது.

0 Responses to சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்டும் தரப்புடன் இணைந்து செயற்படத் தயார்: எம்.ஏ.சுமந்திரன்