வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய பாதுகாப்பையும், தேவையான நிவாரணங்களையும் வழங்குமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தொடர்ச்சியாக பெய்துவரும் மழையின் விளைவாக வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள 6 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும், பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு வீதமானோர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 4 இலட்சத்து 43 ஆயிரத்து 112 பேரில் பெரும்பாலானோர் பத்து வருடங்களுக்கு முன்னதாக ஏற்பட்ட சுனாமி பேரலையினாலும் பாதிக்கப்பட்டவர்கள் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நிதி ஒதுக்கப்படுகின்ற போதிலும், ஒதுக்குப்புறமான கிராமங்களுக்கு நிவாரணங்களை கொண்டு சேர்ப்பது சவால் மிகுந்த ஒன்றாகும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

0 Responses to வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை அரசு வழங்க வேண்டும்: கூட்டமைப்பு