ஐ.ம.சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் ஏதேனும் தவறுகள் காணப்படுமாயின், அதற்கு அரசாங்கத்திலிருந்து அண்மையில் விலகிச் சென்றவர்களும் பொறுப்புக் கூற வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொல்காவெல பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “2005ஆம் ஆண்டில் நாட்டில் காணப்பட்ட நிலைமையை புதிதாக கூற வேண்டியதில்லை. இது குறித்து இன்று சிலர் அரசாங்கத்தில் இருக்காதது போன்று பேசுகின்றனர். விலகி செல்லும் வரை அரசாங்கம் முன்னெடுத்த அனைத்து விடயங்களும் சிறந்தது என கூறினார்கள். ஒரு நாளும் விமர்சிக்கவில்லை. தற்போது அவசரமாக குறைகளை கண்டு பிடித்து கூறுகின்றனர்.
நாங்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால் அது தெரியாது, இருந்தும் அவ்வாறு இடம்பெற்றிருந்தால் அனைத்து தவறுகளிலும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளது. பொறுப்புள்ளது. அமைச்சரவை, பாராளுமன்ற உறுப்பினர்கள் நாம் அனைவரும் செய்த தவறுகளுக்கு என்னை மற்றும் ஏன் சாடுகின்றார்கள்” என்றுள்ளார்.

0 Responses to தவறுகளுக்கு அரசாங்கத்திலிருந்து விலகியவர்களும் பொறுப்புக் கூற வேண்டும்: மஹிந்த