நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இந்நாட்டு சிறுபான்மையின மக்களுக்கு மிகவும் பாதுகாப்பானது என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் பிரதானிகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் நேற்று முன்தினம் வியாழக்கிழமை சந்திப்பொன்றை நடாத்தினார். இச்சந்திப் பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பான ஏற்பாடு மாத்திரமல்லாமல், அவர்களது உரிமைகளையும். அபிலாஷைகளையும் பெற்றுக் கொள்ளுவதற்குரிய சிறந்த ஏற்பாடுமாகும்.
இவ்வாறான நிலையில் மைத்திரிபால சிறிசேன தெரிவானால் அந்த ஏற்பாட்டை நீக்கிவிடுவார். அது சிறுபான்மை மக்களுக்கே பாதிப்பாக இருக்கும். எதிரணிக் கூட்டில் இணைந்துள்ள கட்சிகளின் கொள்கைகள் மலைக்கும் மடுவுக்குமிடையிலான வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளை மக்கள் விடுதலை முன்னணியோ, ஜாதிக ஹெல உறுமயவோ ஏற்றுக் கொள்ளாது. அக்கட்சிகளின் கொள்கைகள் பொது இணக்கப்பாடுகளுக்கு வர முடியாதவை. ஜாதிக ஹெல உறுமய மாகாண சபை முறைமை, தேச வழமை சட்டம், முஸ்லிம் தனியார் சட்டம் என்பவற்றை ஒழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்கிறது. ஆனால், ஜாதிகஹெல உருமய அதற்கு எதிரான கட்சி. ஐக்கிய தேசியக் கட்சி தனியார்மயப்படுத்தலுக்கு முன்னுரிமை அளிக்கின்றது. மக்கள் விடுதலை முன்னணி அதற்கு முற்றிலும் எதிரானது. இவ்வாறு கொள்கை கோட்பாட்டு ரீதியிலான முரண்பாடுகள் நிறைந்த கூடாரமாக எதிரணியின் கூட்டு உள்ளது.
அக்கூட்டினால் நாட்டிற்கு ஒரு போதும் விமோசனம் கிடைக்காது. அவர்கள் ஜனாதிபதியுடன் பொறாமை கொண்டே செயற்படுகின்றனர். மற்றப்படி அவர்கள் நாட்டில் அன்பு கொண்டு செயற்படவில்லை. அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகக் கதைக்கின்றனர்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை 24 மணி நேரத்தில் ஒழிப்பதாக சிலரும், 100 நாட்களில் ஒழிப்பதாக இன்னும் சிலரும் ஜனாதிபதியின் பதவிக் காலத்தை 04 வருடங்களுக்கு குறைக்கப் போவதாக வேறு சிலரும் கூறுகின்றனர். இவை அனைத்தும் எதிரணி கூட்டின் கூற்றுக்களே. அக்கூட்டு குழம்பிய குட்டையே” என்றுள்ளார்.

0 Responses to நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை சிறுபான்மையினருக்கு பாதுகாப்பானது: ஜீ.எல்.பீரிஸ்