சந்திரிக்கா குமாரதுங்க தொடர்பில் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டு பெண்களை இழிவுபடுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ரோஷி சேனநாயக்க, அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
“சந்திரிக்கா என்பவர் கீழே தள்ளி மிதித்து நிர்வாணப்படுத்தி, வீதியில் ஓட வைக்க வேண்டியவர்“ என்ற கருத்தை எஸ்.பி.திஸாநாயக்க அண்மையில் வெளியிட்டிருந்தார். இதனையடுத்து, பெண்ணுரிமை அமைப்புக்கள் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றன.
இந்த நிலையில், கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் பேசிய ரோஷி சேனநாயக்க, ”உயர்கல்வி அமைச்சராக இருக்கும் ஒருவர் இவ்வாறான கருத்தை வெளியிடுவது கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும். தண்டனை சட்டக்கோவையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க முடியும். நாட்டின் பெண்கள் தொடர்பில் இழிவாக அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்த கருத்திற்கு அவரின் அமைச்சர் பதவியை இரத்து செய்யுமாறு மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்டுக் கொள்கின்றோம்.” என்றுள்ளார்.

0 Responses to சந்திரிக்கா குறித்த சர்ச்சைக் கருத்து; எஸ்.பி.திஸாநாயக்கவை பதவி நீக்க வேண்டும்: ரோஷி சேனநாயக்க