Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டெல்லியில் கடந்த 2008-ம் ஆண்டில் நடந்த 14 வயது பெண்பிள்ளையின் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கில் அவளது பெற்றோரே குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லிக்கு அருகில் உள்ள நொய்டாவில், மகள் ஆருஷியை கழுத்தை வெட்டிக் கொன்ற பெற்றோரே அவர்களின் வீட்டில் பணிபுரிந்த வேலையாளையும் வெட்டிக் கொன்றுள்ளதாக நீதிமன்றத்தில் நிரூபணமாகியுள்ளது.

வீட்டு வேலைக்காரனும் மகளும் ஒன்றாக இருந்ததைக்கண்ட பெற்றோர் ஆத்திரத்தில் அவர்களைக் கொன்றுவிட்டதாக வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டனர். எனினும் கொலைக்கான தெளிவான நோக்கம் இன்னும் வெளிப்படவில்லை.

ஆனால், காவல்துறையினர் விசாரணைகளை தவறான விதத்தில் கையாண்டிருப்பதாக அந்தப் பெற்றோர் வாதிட்டனர்.

கொலைகள் செய்தது மற்றும் ஆதாரங்களை அழித்தது ஆகிய இரண்டு குற்றங்களிலுமே டாக்டர் ராஜேஷ் தல்வாரும் அவரது மனைவி நுபூர் தல்வாரும் குற்றவாளிகள் என காஜியாபாத்தின் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை மதியம் 3.30 மணி அளவில் தீர்ப்பளிக்கப்பட்டது.

குற்றவாளிகளாக அறிவிக்கிப்பட்டுள்ள இருவருக்குமான தண்டனை நாளை அறிவிக்கப்படும்.

நீதிபதி ஷியாம் லால் தீர்ப்பை அறிவித்தவுடன், கணவன் மனைவி இருவருமே கண்ணீர் விட்டு அழுதனர். இந்த தீர்ப்பினால் அவர்கள் இருவரும் கடுமையான வருத்ததிற்கும் காயத்திற்கும் உள்ளாகியுள்ளதாகவும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

மருத்துவத் தம்பதிகளான டாக்டர் ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வாரின் மகளான ஆருஷி அவரது இல்லத்தில் 2008 ஆம் ஆண்டு மே மாதம் 13-ம் தேதி கொலை செய்யப்பட்டிருந்தார். அவர்களது வீட்டுப் பணிகளை செய்யும் ஹேம்ராஜ் தான் கொலையாளி என்று போலிஸ் ஆரம்பத்தில் அறிவித்திருந்தது.

ஆனால், அதே நாளன்று சிறிது நேரம் கழித்து அவரது வீட்டு மாடியில் ஹேம்ராஜின் உடலை காவல் துறையினர் கண்டெடுத்தனர். இறந்த இருவரும் கழுத்தில் வெட்டுப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவம் நடந்த இடத்தில் ஆதாரங்கள் அழிக்கப்பட்டும், சரியாக சேகரிக்கப் படாமலும் இருந்ததால், நீண்டகாலமாக இந்த வழக்கில் எந்த ஒரு முடிவிற்கும் உடனடியாக வரமுடியாமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

- நன்றி பிபிசி

0 Responses to '14 வயது ஆருஷியை பெற்றோரே கொலை செய்தனர்': நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com