Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வைகோ கைதாவாரா?

பதிந்தவர்: தம்பியன் 10 December 2009

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக மேலும் ஒரு வழக்கு: வைகோ கைதாவாரா?

ஈழத்தமிழர்கள் பிரச்சனை தொடர்பாக அண்மையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்ததாக கூறப்படும் ஆட்சேபகரமான கருத்தால் அவர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் கைது செய்யப்படக்கூடும் என்று காவல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈழத்தமிழர்கள் பிரச்சனையில் இந்திய அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பலமுறை கடிதங்கள் எழுதியிருந்தார்.இந்த கடிதங்கள் அனைத்தும் ஒன்றாக தொகுக்கப்பட்டு "குற்றஞ் சாட்டுகிறேன்' என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டது. ராணி சீதை மன்றத்தில் கடந்த ஜூலை மாதம் 15ந் தேதி இந்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய வைகோ, இந்திய அரசுக்கு எதிராகவும், நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும் சில கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து அவர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் மோகன் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த வழக்கிலும் வைகோ எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.இடைத்தேர்தல் நேரத்தில் வைகோ கைது செய்யப்படலாம் என்று வெளியாகி உள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 Responses to வைகோ கைதாவாரா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com