Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகம், கேரளா,ஆந்திரா உள்ளிட்ட 7 கடலோர மாநிலங்களில் பாஜகவை வலுப்படுத்த வேண்டும் என்றும், அப்படி வலுப்படுத்தினால்தான் மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று அமித் ஷா கூறியுள்ளார்.

இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ள பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா, இன்று மாலை சென்னையை அடுத்துள்ள மறைமலை நகரில் நடைப்பெற்ற பிரமாண்டப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.அப்போது தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்று கூறியுள்ளார்.அதற்கு தமிழகத்தில் மேலும் புதிதாக 60 லட்சம் வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தமிழகத்தில் ஒரு கோடி வாக்களர்களை சேர்க்கும் பணிகளில் மும்முரமாக ஈடுப்பட்டு உள்ளார் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

அமித் ஷா பேசுகையில் தமிழகம், புதுவை, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட 7 கடலோர மாநிலங்களில் பாஜகவை வலுப்படுத்தாமல் மத்தியில் மீண்டும் ஆட்சி அமைப்பது மிகவும் கடினம் என்று அவர் மிகவும் நேர்பட பேசியுள்ளார். அதோடு முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் குறைக் குற்றங்களை எடுத்துக்கூறி உரையாற்றியுள்ளார்.

முன்னதாக அமித் ஷாவை கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த அன்புமணி ராமதாஸ், பாரிவேந்தர் இருவரும் சந்தித்தனர் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to தமிழகம், கேரளா,ஆந்திரா உள்ளிட்ட கடலோர மாநிலங்களில் பாஜகவை வலுப்படுத்த வேண்டும்: அமித் ஷா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com