இன்று வெள்ளிக்கிழமை பாகிஸ்தானின் தென்பகுதியிலுள்ள ஷிகர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறுபான்மை ஷியா பிரிவு முஸ்லிம்களின் பள்ளி வாசல் ஒன்றில் பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டிருந்த போது குண்டு வெடித்ததில் பலியானவர்கள் எண்ணிக்கை 50 ஆக உயர்வடைந்திருப்பதாகவும் மேலும் 31 பேர் காயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சியில் இருந்து 500 Km தொலைவில் சிந்த் மாகாணத்தில் அமைந்துள்ள ஷிகர்பூரில் நடத்தப் பட்ட இந்த மோசமான குண்டுத் தாக்குதலுக்கு சுன்னி போராளிக் குழுவான ஜுன்டுல்லா பொறுப்பேற்றுள்ளது. குண்டு வெடிப்பு நடந்த சமயத்தில் பள்ளி வாசலின் உள்ளே 600 பொதுமக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம் எகிப்தின் வடக்கு சினாய் நகரில் பல இராணுவ பாசறைகளைக் குறி வைத்து கார்க் குண்டுகள் மற்றும் மோர்ட்டார்கள் மூலம் ISIS போராளிகள் மேற்கொண்ட தாக்குதலில் 27 இராணுவத்தினர் உட்பட 30 பேர் பலியாகி உள்ளதுடன் 60 இற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். எகிப்து மீது இஸ்லாமிய தேசப் போராளிகள் மேற்கொண்ட சமீபத்திய தாக்குதல்களில் மிக மோசமான தாக்குதல் இதுவெனக் கூறப்படுகின்றது.
கொல்லப் பட்டவர்களில் 6 மாதக் குழந்தை உட்பட இரு சிறுவர்களும் அடங்குகின்றனர். இக்குண்டுத் தாக்குதல் குறித்து மாநிலத் தொலைக் காட்சி அறிவித்த செய்தியில் இத்தாக்குதல் வடக்கு சினாயின் பாதுகாப்புப் படையின் தலைமையகம் அருகிலுள்ள இராணுவத் தளம், ஹோட்டல் மற்றும் பல சோதனைச் சாவடிகளைக் குறி வைத்து நிகழ்த்தப் பட்டதாகத் தெரிவித்துள்ளது. இத்தாக்குதல்களில் 3 ஏவுகணை ஷெல்களும் பயன் படுத்தப் பட்டுள்ளன. மேலும் இச்சம்பவத்தை அடுத்து எகிப்து அரசு காஸா ஸ்டிரிப்புடன் உள்ள எல்லையில் இடை மண்டலப் பகுதியை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. எகிப்தின் சினாய் பகுதியானது முன்னால் அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி இறக்கப் பட்டதன் பின் ஜனவரி 2011 இல் ஏற்பட்ட புரட்சியை அடுத்து பல வன்முறைச் சம்பவங்களை சந்தித்து வருகின்றது.
மேலும் 2013 இல் இஸ்லாமிய அதிபரான மொஹம்மட் மோர்சி பதவி துறந்ததை அடுத்து போலிசார் மற்றும் இராணுவத்தினரைக் குறி வைத்து நிகழ்த்தப் படும் தாக்குதல்கள் அதிகரித்தே வந்துள்ளன. 2013 தொடக்கம் இவ்வாறான தாக்குதல்களில் குறைந்தது 500 பாதுகாப்புப் படையினர் கொல்லப் பட்டிருப்பதாகப் புள்ளி விபரம் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to பாகிஸ்தானின் ஷியா பள்ளி வாசல் மற்றும் எகிப்தில் குண்டு வெடிப்புக்கள்!: 80 பேர் பலி