Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் 400 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்யப்படவிருந்த உல்லாச விடுதிகள் மற்றும் சுற்றுலா மைய செயற்றிட்டத்துக்கான வரி சலுகைகளை இலங்கை அரசாங்கம் விலக்கிக்கொள்ள தீர்மானித்துவிட்டதால் அத்திட்டத்தை முன்னெடுக்கப்போவதில்லையென ஜேம்ஸ் பாக்கரின் கிறவுன் குரூப் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜேம்ஸ் பாக்கரின், சுற்றுலா மையம் உட்பட மூன்று வெளிநாட்டு சுற்றுலா மையங்களுக்கான தாராள வரி சலுகைகளை இரத்து செய்யப்போவதாக இலங்கையின் புதிய அரசாங்கம் நேற்று வியாழக்கிழமை சமர்பித்த வரவு செலவுத் திட்டத்தின் போது அறிவித்தது.

புதிய அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தின் காரணமாக தமது கம்பனி இந்த திட்டத்தை நிறுத்தப்போவதாக கிறவுன் குரூப் நிறுவனத்தின் பேச்சாளர் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இந்த கம்பனிக்கு பல வரிசலுகைகளை வழங்கியிருந்தது. அந்தச் சுற்றுலா மையங்களில் கசினோவை நாம் அனுமதிக்கமாட்டோம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to உல்லாச விடுதிகள், கசினோக்கள் திட்டத்தை ஜேம்ஸ் பார்க்கர் கைவிடத் தீர்மானம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com