Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவில் அடுத்த வாரம் பொதுமக்கள் நிகழ்ச்சி ஒன்றில் அதிபர் ஒபாமாவும் திபேத்தின் ஆன்மிகத் தலைவருமான தலாய் லாமாவும் ஒன்றாகக் கலந்து கொள்ளவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி 18 ஆம் திகதி வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமாவும் தலாய்லாமாவும் மேற்கொண்டிருந்த சந்திப்பு சீனாவின் பலத்த எதிர்ப்புக்கு உள்ளாகி இருந்த நிலையில் மறுபடி இவர்கள் இணைந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளவுள்ளதான நிகழ்வும் நிச்சயம் சீன அதிகாரிகளை ஆத்திரமடையச் செய்யும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

எதிர்வரும் பெப்ரவரி 5 ஆம் திகதி அமெரிக்காவில் வருடாந்த தேசிய பிரார்த்தனை மற்றும் காலை உணவுப் பகிர்வு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் அதிபர் ஒபாமா மத சுதந்திரத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றுவார் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் சந்தேகத்துக்கு இடமின்றி தீபேத்தின் விடுதலைக்கான மிக முக்கிய ஐகோனான தலாய் லாமாவும் இந்நிகழ்வில் பங்குபெற அழைப்பு விடுவிக்கப் பட்டிருப்பதாகவும் மேற்குலக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்வின் போது அல்லது அதற்கு முன்பு இவ்விரு தலைவர்களும் எப்போது சந்திப்பர் என்பதை வெள்ளை மாளிகை தெரிவிக்க மறுத்துள்ள போதும் தேசிய பாதுகாப்புச் சபையின் பேச்சாளர் மீஹன் குறிப்பிடுகையில் ஏற்கனவே இவர்கள் 3 தடவை திரை மறைவில் சந்தித்திருப்பதாகவும் இறுதியாக கடந்த பெப்ரவரியில் சந்தித்து இருந்ததாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மீஹன் மேலும் தெரிவிக்கையில் அதிபர் ஒபாமா தலாய் லாமாவின் போதனைகளை மிக உறுதியாக ஆதரித்து வருபவர் எனவும் தீபேத்தின் தனித்துவமான மத, கலாச்சார மற்றும் மொழியியல் பாரம்பரியங்களைப் பேணுவதில் அவரது பங்கை மிகவும் மதிப்பவர் என்றும் கூறியுள்ளார். தற்போது நாடுகடந்து இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கும் தலாய்லாமா 1989 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர் என்பதுடன் இன்று வரை திபேத்துக்கு சீனாவிடம் இருந்து இன்னமும் அதிக சுதந்திரம் மற்றும் சுயாட்சியைப் பெற்றுத் தருவதற்காகக் குரல் கொடுத்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to அடுத்த வாரம் பொதுமக்கள் நிகழ்வில் ஒன்றாகக் கலந்து கொள்ளவுள்ள ஒபாமா மற்றும் தலாய்லாமா!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com