இம்மாதத் தொடக்கத்தில் பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களில் ஒன்றான கோஷெர் அங்காடிக்குள் மறைந்திருந்து பிணைக் கைதிகளைப் பிடித்து வைத்திருந்த தீவிரவாதி அவர்களில் 4 பேரை சுட்டுக் கொன்றத் தாக்குதல் சம்பவத்தினை கமெரா ஒன்றின் மூலம் வீடியோ பதிவு செய்திருப்பதாக அமெரிக்க புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதாவது 3 பேரைச் சுட்டுக் கொன்றது உட்பட குறித்த முற்றுகை சம்பவத்தின் போதான 7 நிமிடங்களைக் கமெரா மூலம் கோஷெர் அங்காடியில் ஒழிந்திருந்த அமெடி கௌலிபலி என்ற தீவிரவாதி பதிவு செய்ததாக L'Express என்ற பிரெஞ்சுப் பத்திரிகையின் தேசிய பாதுகாப்பு நிருபரான எரிக் பெல்லெட்டியெர் என்பவரும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அமெடி கௌலிபலி போலிசாரால் சுட்டுக் கொல்லப் பட முன்னர் குறித்த மார்க்கெட்டுக்கு உள்ளே இருந்த ஓர் கம்பியூட்டரைப் பாவித்து தனது தாக்குதல் வீடியோவின் பிரதி ஒன்றை ஈ மெயில் மூலம் தனக்கு அவசியமான ஒரு தரப்புக்கு அனுப்ப இயன்றதாகவும் கூட குறித்த விசாரணையை மேற்கொண்ட பிரெஞ்சு புலனாய்வுப் பிரிவின் தகவல் ஒன்றை மேற்கோள் காட்டி பெல்லெட்டியெர் தகவல் அளித்துள்ளார்.
தனது உடற் பகுதியில் மாட்டியிருந்த GoPro வகை கமெரா மூலம் குறித்த வீடியோ பதிவை கௌலிபலி எடுத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இத்தகவல் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பிரெஞ்சு புலன் விசாரணையாளர் ஒருவர் கௌலிபலி தான் பதிவு செய்த வீடியோவை மீடியாக்களுக்கு அல்லாமல் தனிப்பட்ட ஒரு நபருக்கே அனுப்பி இருப்பதற்கு மிக உறுதியான வாய்ப்புக்கள் உள்ளன என்றதுடன் மேலும் குறிப்பிட்ட அந்நபர் இவ்வீடியோவை ஒருநாள் இணையத் தளத்தில் வெளியிடுவதற்கும் சாத்தியமுள்ளது எனத் தான் அஞ்சுவதாகவும் கூறியுள்ளார்.
ஏற்கனவே பிரெஞ்சு புலனாய்வுத் துறை மார்க்கெட்டுக்குள் கௌலிபலி பாவித்த கம்பியூட்டர் மற்றும் ஈ-மெயில் கணக்கு ஆகியவை தொடர்பில் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருவதுடன் கௌலிபலிக்கும் ISIS போராளிக் குழுவுக்கும் இடையிலான தொடர்பு பற்றியும் அறிய முற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

0 Responses to பாரிஸ் கோஷெர் அங்காடித் தாக்குதலை வீடியோ பதிவு செய்த தீவிரவாதி?