வடக்கு மாகாணத்தில் நிலத்தடி நீரை மாசுபடுத்தும் நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் சுத்தமான குடிநீருக்கான விசேட செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
சுத்தமான குடிநீருக்கான செயலணியின் கலந்துரையாடல் யாழ். பொது நூலக பேரவைக் கேட்போர் கூடத்தில் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
வடக்கு மாகாண அமைச்சர்கள், அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், வைத்திய அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
இந்தப் பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பிரச்சினை தொடர்பில் நேரடியாக கண்காணித்து விரைவில் தீர்வினைப் பெறும் நோக்கில் விசேட செயலணி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொது மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும் இந்த செயலணியில் அங்கம் வகிப்பதாக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் நிலத்தடி நீரை மாசுபடுத்தும் நடவடிக்கைகள் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான தொலைபேசி இலக்கமொன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 0212211265 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக இது தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும்.

0 Responses to வடக்கு மாகாணத்தில் சுத்தமான குடிநீருக்கான விசேட செயலணி உருவாக்கம்!