Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாக மன்னார் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஜனாதிபதியுடன் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இந்த இணக்கப்பட்டுக்கு வந்ததாகவும் இதனையடுத்து 26ஆம் திகதி திங்கட்கிழமை, தான் சிறைச்சாலைக்குச் சென்று தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்ததாகவும் ஆயர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மன்னார் ஆயர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியும் நானும் நீண்ட நேரம் கலந்துரையாடினோம். மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் கைதிகளை இரண்டு சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி மன்னிப்பின் பேரில் விடுதலை செய்தது போன்று தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என நான், ஜனாதிபதியிடம் கோரினேன்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, 'தமிழ் அரசியல் கைதிகளை பலரதும் வேண்டுகோளுக்கிணங்க மூன்று மாத காலத்துக்குள் விடுவிக்க முடியாது. இருப்பினும், ஒரு வருடத்துக்குள் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார். இதேபோன்று, ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மன்னாருக்கு விஜயம் செய்திருந்த மைத்திரிபால சிறிசேன, என்னை சந்தித்து கலந்துரையாடும் போதும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க இணக்கம் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள பல்வேறு சிறைச்சாலைகளிலும் சுமார் 500 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 25ஆம் திகதி ஜனாதிபதியை சந்தித்து இவர்கள் தொடர்பில் கலந்துரையாடிய நான், 26ஆம் திகதி கொழும்பு மகசின் சிறைச்சாலை மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளுக்குச் சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளிடம், ஜனாதிபதியின் இணக்கம் தொடர்பில் தெரிவித்துவிட்டே வந்தேன்.” என்றுள்ளார்.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகளை ஒரு வருடத்துக்குள் விடுவிக்க ஜனாதிபதி இணக்கம்: இராயப்பு ஜோசப்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com