Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தயாநிதி மாறன் பிஏ உள்ளிட்ட சன் டிவி ஊழியர்களின் ஜாமீன் மனுமீதான விசாரணையை திங்கட்கிழமைக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

பிஎஸ்என்எல் இணைப்புக்களை சன் டிவிக்கு முறைகேடாக வழங்கிய விவகாரத்தில் சன் டிவி எலெக்ட்ரீஷியன், மேனேஜர் மற்றும் தயாநிதி மாறனின் பிஏ உள்ளிட்டவர்களை கடந்த 21ம் திகதி சிபிஐ கைது செய்து விசாரித்து வந்தது.இதற்கிடையில் மூவரையும் சிபிஐ தமது காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை சென்னை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. மேலும், காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் என்னவென்று மனுவில் சிபிஐ தெரிவிக்கவில்லை என்று காரணமும் கூறியிருந்தது.

ஆனால், சிபிஐ சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்திருந்தது.அந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், மனுவின் மீதான விசாரணையை வருகிற திங்கட்கிழமைக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

0 Responses to தயாநிதி மாறன் பிஏ உள்ளிட்ட சன் டிவி ஊழியர்களின் ஜாமீன் மனுமீதான விசாரணை திங்கட்கிழமை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com