Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் இணையத் தளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் எண்ணிகையை அதிகரித்து உள்ளது தேவஸ்தான நிர்வாகம்.

திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது.அதோடு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இணையத் தளம் மூலம் தரிசன டிக்கெட்டை முன்பதிவு செய்து, அந்த நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களினம் எண்ணிகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இந்த டிக்கெட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

அதன்படி, வருடத்தின் 300 நாட்களுக்கு 24 மணி நேரமும் இணையத் தளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய 18 ஆயிரம் டிக்கெட்டுக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கி வந்த தேவஸ்தான நிர்வாகம், இப்போது அதை உயர்த்தி 20 ஆயிரம் டிக்கெட்டுக்களுக்கு அனுமதி வழங்க முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

0 Responses to ஏழுமலையானை தரிசிக்க இணைய தளம் மூலம் முன்பதிவுக்கு டிக்கெட் எண்ணிக்கை அதிகரிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com