Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் புதிய அரசாங்கத்தின் கீழ் ஊடக சுதந்திரம் அதிகரிக்கும் என்று தான் நம்புவதாக பிரித்தானியாவின் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாயத்துக்கான இராஜாங்க அமைச்சர் ஹியூ ஸ்வைர் தெரிவித்துள்ளார்.

அவர், யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை நேற்று வியாழக்கிழமை மேற்கொண்டு கொழும்பு திரும்பிய பின்னரே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடக்கு மாகாணத்தில் பல்வேறு பரிமாணம் கொண்ட பிரச்சினைகளை நான் அறிந்துகொண்டேன். நல்லிணக்கம், பொறுப்புகூறல், இராணுவத்தின் வகிபாகம், அரசியல் தீர்வுக்கான வாய்ப்புகள், இலங்கைக்கு பிரித்தானியா உதவ கூடிய வழிமுறைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முதலமைச்சருடன் பேசினேன். அது மட்டுமின்றி மீண்டும் யுத்தத்துக்கு பலியாகக் கூடாதென்பதை வலியுறுத்தும் சின்னமாக ஆனையிறவு உள்ளது” என்றுள்ளார்.

0 Responses to இலங்கையில் புதிய அரசின் கீழ் ஊடக சுதந்திரம் அதிகரிக்கும்: ஹியூ ஸ்வைர் நம்பிக்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com