Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் 44வது பிரதம நீதியரசராக கனகசபாபதி ஸ்ரீபவன் சற்றுமுன்னர் (இன்று வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

43வது பிரதம நீதியரசராக கடமையாற்றிய ஷிராணி பண்டாரநாயக்க நேற்று வியாழக்கிழமை நள்ளிரவோடு தன்னுடைய பதவியிலிருந்து விலகிக் கொண்டார். இதனையடுத்தே, பிரதம நீதியரசராக கனகசபாபதி ஸ்ரீபவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, நீதியரசர் கனகசபாபதி ஸ்ரீபவன் முன்னிலையிலேயே ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன கடந்த 9ஆம் திகதி பதவியேற்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவராவார்.

0 Responses to இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக கே.ஸ்ரீபவன் பதவியேற்றார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com