Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 15ஆம் திகதி இந்தியாவுக்கு செல்லவுள்ளார். அவர், ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இது.

15ஆம் திகதி இந்தியாவுக்கு புறப்பட்டுச் செல்லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 18ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பாரென ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியா செல்லவுள்ளார்.

இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இந்திய ஜனாதிபதி பிரணாப் முஹர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார். இதேவேளை, பெளத்தர்களின் புனித தலமான புத்தகயாவுக்குச் செல்லவுள்ள அவர், அங்கிருந்து திருப்பதி ஆலயத்துக்கும் சென்று தரிசனங்களில் ஈடுபடுவார்.

இதனிடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் மாதம் 15 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பையேற்றே அவர் இங்கு வருகை தருகிறார். 15 ஆம் திகதி இலங்கை வரும் பிரதமர் நரேந்திர மோடி 20 ஆம் திகதி வரை தங்கியிருப்பார்.

0 Responses to மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 15ஆம் திகதி இந்தியா பயணம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com