Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளர் என்று கூறப்படும் கே.பி. என்கிற குமரன் பத்மநாதனை இலங்கையை விட்டு வெளியேற மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கே.பி.யை கைது செய்ய உத்தரவிடுமாறு வலியுறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஜனவரி 19ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணியினால் (ஜே.வி.பி) மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரைணைகளின் போதே மேற்கண்ட தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

0 Responses to கே.பி. நாட்டை விட்டு வெளியேற மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com