இலங்கையின் 67வது சுதந்திர தின தேசிய நிகழ்வுகளில் பங்குபற்றுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு தீர்மானத்தையும் கொண்டிருக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆனாலும், நேற்றைய சுதந்திர தின நிகழ்வுகளில் இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும் பங்குபற்றியமை தனிப்பட்ட முடிவாகும். அது, கட்சியின் (த.தே.கூ) நிலைப்பாடு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்விருவரும் சார்ந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி கூட இது தொடர்பில் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும், சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பங்கேற்பு உகந்ததாக இருக்காது என தானும், மாவை சேனாதிராஜாவும் ஏற்கனவே அவர்களிடம் கூறியதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பது என்பது இலங்கையின் அரசியல் சாசனத்தை ஏற்றுக் கொண்டதற்கு சமம் என்பதாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதற்கு முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியும் அதில் பங்குபெறாமல் இருந்து வந்தன என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், இப்போது என்ன அடிப்படையில், என்ன காரணத்துக்காக அவ்விருவரும் கலந்து கொண்டனர் என்பதும் கூட யாருக்கும் தெரியாது. அவர்களின் பங்கேற்புக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சுதந்திர தினம் போன்ற தேசிய நிகழ்வுகள் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது எனும் கருத்தும் ஏற்புடையது அல்ல என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to சுதந்திர தின நிகழ்வில் இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும் பங்குபற்றியமை கூட்டமைப்பின் முடிவல்ல: சுரேஷ் பிரேமச்சந்திரன்