சம்பூர் அனல் மின்நிலையத்திற்கென சுவீகரிக்கப்பட்ட காணியை மீளப்பெற்று ஏற்னவே அங்கு வாழ்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான முயற்சிகளில் களமிறங்கியிருப்பதாக மீள்குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் நாளை வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சு நடத்தவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வலிகாமம் வடக்கு காணிகளை மீளப் பெறுவதன் மூலமும் ஏற்கனவே அங்கு வாழ்ந்த மக்களை அதில் மீளக்குடியமர்த்த முடியும். எனவே இது குறித்தும் பிரதமருடனான நாளைய சந்திப்பின் போது கலந்துரையாடப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.
சம்பூரில் முதலீட்டு ஊக்குவிப்புச் சபையினால் சுவீகரிக்கப்பட்ட காணியினை மீளப்பெற்றுக் கொள்வதன் மூலமும் மீளக்குடியமர்த்தப்பட வேண்டியவர்களுக்கான காணி பற்றாக்குறைக்கு தீர்வு கிடைக்குமென நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் பல்வேறு காரணங்களுக்காக இடம்பெயர்ந்தவர்கள் இதுவரை மீளக்குடியமர்த்தப்படாமலுள்ளனர். இவர்கள் வாழ்ந்து வந்த காணிகள் மேற்படி காரணங்களுக்காக சுவீகரிக்கப் பட்டன. அதற்கு மேலதிகமாக மோதல் காலத்தில் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் நாடற்ற நிலையிலிருக்கும் அவர்களது பிள்ளைகளையும் இலங்கைக்கு மீள் வரவழைத்து குடியமர்த்தும் பாரிய பொறுப்பு அரசாங்கத்திற்குள்ளது என்றும் டி.எம்.சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.
மீள்குடியமர்த்தும் பணிகளை ஆரம்பிப்பதற்கு தேவையான காணிகளை ஒதுக்கீடு செய்வது அவசியம் எனவே முதற்கட்டமாக சம்பூர் மற்றும் வலிகாமம் வடக்கு காணிகளை மீளப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to சம்பூரில் சுவீகரிக்கப்பட்ட காணிகளை உரியவர்களிடம் கையளிக்க நடவடிக்கை: டி.எம்.சுவாமிநாதன்