பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் அழகிப் போட்டிகள் நடத்தத் தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம், உயர் கல்வித்துறைக்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு தமது பெண் அண்ணா பல்கலைக் கழக கல்லூரியில் அழகிப் போட்டியில் கலந்துக்கொண்டு, அழகிப் பட்டத்தை வென்றார் என்றும், ஆனால் இதுவரை அழகிப் போட்டிக்கு அறிவிக்கப்பட்ட 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை கல்லூரி நிர்வாகம் தரவில்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பெண்மணி வழக்குத் தொடர்ந்து இருந்ததாகத் தெரிய வருகிறது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பெண்மணியின் குற்றச்சாட்டுத் தொடர்பாக வருகிற 23ம் திகதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று பல்கலைக் கழக கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். மேலும், இன்ஜினியரிங் படிப்புக்கு அழகிப் போட்டி எந்த விதத்தில் உதவி புரியும் என்று கேள்வியும் எழுப்பியுள்ளனர்.
இதையடுத்து இனி கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளில் அழகிப் போட்டிகள் நடத்தத் தடை விதிக்க வேண்டும் என்று உயர் கல்வித் துறைக்கு நீதிபதிகள் உத்தரவுப் பிறப்பித்துள்ளனர்.

0 Responses to கல்லூரிகளில் அழகிப் போட்டிகள் நடத்தத் தடை விதிக்க வேண்டும்:உயர் நீதிமன்றம்