தமிழ் மக்களின் எதிர்காலம் கருதியே நாட்டின் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்குபற்றியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 67வது சுதந்திர தினத்தின் தேசிய நிகழ்வுகள் பாராளுமன்ற வளாக மைதானத்தில் நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்றது. இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணி, இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் முக்கியஸ்தர்கள் சுதந்திர தின நிகழ்வில் 43 ஆண்டுகளுக்குப் பின்னர் பங்குபற்றிய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இவர்களின் பங்குபற்றுதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவல்ல என்று அந்தக் கட்சியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிவித்துவிட்டார்.
இந்த நிலையில், சுதந்திர தின விழாவில் பங்கேற்பது குறித்து கவனமாக சிந்தித்த பிறகே தான் முடிவெடுத்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பி.பி.சி.யிடம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம், தமிழ் மக்களின் எதிர்காலம், புதிய ஆட்சியாளர்கள் மீதுள்ள நம்பிக்கை ஆகியவற்றின் காரணமாக சுதந்திர தின விழாவில் பங்கேற்பது என்று முடிவெடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குளேயே இது குறித்து மாற்றுக் கருத்துக்கள் இருந்தன என்பதை ஏற்றுக் கொள்ளும் அவர், எனினும் இது தொடர்பில் மூத்த தலைவர்களுடன் கலந்துரையாடப்பட்டது எனக் கூறியுள்ளார்.
முந்தைய ஆட்சிபோல் அல்லாமல், இந்த ஆண்டின் சுதந்திர தின வைபவம், இராணுவ வெற்றியை மையப்படுத்தவில்லை என்றும், அப்படியான சூழலில் இந்த நிகழ்வில் பங்குபெறுவது நாட்டில் வாழும் எல்லா மக்களுக்கும் ஒரு நல்ல செய்தியை அனுப்பும் என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிரந்தரமான சமாதானம் ஏற்படும் வகையிலும், மக்கள் மத்தியில் நல்லிணக்கம் மற்றும் சமத்துவம் ஏற்பட வேண்டும் என்கிற அடிப்படையிலேயே இந்த ஆண்டின் நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டிருந்த என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to தமிழ் மக்களின் எதிர்காலம் கருதியே சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பு: சம்பந்தன்