Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் இன்று!

பதிந்தவர்: தம்பியன் 03 February 2015

பேரறிஞர் அண்ணாவின் 46வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினமான இன்று திமுக,அதிமுக உள்ளிட்டக் கட்சித் தலைவர்கள் அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். ஜெயலலிதா, சென்னை போயஸ் கார்டனில் உள்ள தமது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அண்ணாவின் படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

திமுகவினர் சென்னை வாலாஜாவிலிருந்து சென்னை மெரீனாவில உள்ள அண்ணா சிலை வரை அமைதிப் பேரணி நடத்தி வந்தனர். அங்கு அண்ணா சிலைக்கு கருணாநிதி, ஸ்டாலின், தயாநிதி மாறன்,அன்பழகன் உள்ளிட்டவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

0 Responses to பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் இன்று!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com