Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும், ஊழல்களைத் தடுத்து நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என்று அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஸா தேசாய் பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை சந்தித்துப் பேசிய போதே அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இலங்கை தொடர்பில் இன்று உலகம் பேசிக்கொண்டிருக்கும் இந்த உற்சாகத்தையும்- ஜனநாயகத்தையும் நேரடியாக இங்குவந்து பார்க்கக் கிடைத்ததையிட்டு தான் உண்மையில் மகிழ்ச்சியடைவதாகவும் நிஸா தேசாய் பிஸ்வால் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தங்களின் முதல் 100 நாட்களுக்காக தங்களின் குறிக்கோள்கள் அடங்கிய நிகழ்ச்சி நிரலை முன்வைத்திருக்கிறார்கள். இந்த நோக்கங்களில் பல, மிகவும் குறுகிய காலத்துக்குள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளன.

இங்கு இன்னும் மிகவும் சிரமப்பட வேண்டிய வேலைத்திட்டங்களும் கடுமையான சவால்களும் எதிர்காலத்தில் இருக்கின்றன என்பதை நாங்கள் உணர்ந்துகொள்கின்றோம். இதில் முன்னேற்றம் காண்பதற்காக அமெரிக்காவை இலங்கை பங்காளியாகவும் நட்பு நாடாகவும் கருதமுடியும். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும், ஊழல்களைத் தடுத்து நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கும், மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் அமெரிக்கா இலங்கைக்கு துணைநிற்கும்.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் பல தலைமுறைகள் பழமையானது. சுதந்திர காலம் தொட்டு இலங்கைக்கு இரண்டு பில்லியன் டொலர்களுக்கும் அதிக நிதியுதவியை அளித்துள்ளது. உலகில் இலங்கையின் உற்பத்திப் பொருள்களை அதிகளவில் வாங்கும் நாடு அமெரிக்கா தான். இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகமும் முதலீட்டு உறவுகளும் மேலும் பலமடையும்.” என்றுள்ளார்.

இதனிடையே, இலங்கைக்கான மூன்று நாட்கள் கொண்ட விஜயத்தை மேற்கொண்டிருக்கும் நிஸா தேசாய் பிஸ்வால் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்.

0 Responses to இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவும்; ஜனாதிபதியுடனான சந்திப்பில் நிஸா தேசாய் பிஸ்வால் தெரிவிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com