Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியா பாகிஸ்தானுடன் இரண்டு பில்லியன் அளவுக்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று, இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் தெரிவித்துள்ளார்.

இந்தியா பாகிஸ்தானிடையே வர்த்தக உறவு மேம்படுவதுக் குறித்து பேசியுள்ள அப்துல், இந்தியா பாகிஸ்தானிடையே வர்த்தக உறவு மேம்படுவது மற்றும் பலமடைய வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார். மேலும், பாகிஸ்தான் இதுக்குறித்து இந்தியாவிடம் பல சலுகைகளை எதிர்பார்க்கிறது என்றும் தெரிவித்துள்ளார். அந்த சலுகைகளை இந்தியா கட்டாயம் நிறைவேற்றித் தரும் என்று நம்பிக்கை உள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியா பாகிஸ்தானில் தற்போது இரண்டு பில்லியன் அளவுக்கு வர்த்தகத்தைத் தொடர்ந்து வருகிறது என்றும், இதை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று தாம் கோரிக்கை வைப்பதாகவும் அப்துல் தெரிவித்துள்ளார் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to இந்தியா பாகிஸ்தானுடன் இரண்டு பில்லியன் அளவுக்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதை மேலும் அதிகரிக்க வேண்டும்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com