Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் கடந்த மூப்பது வருடங்களாக தொடர்ந்து வந்த ஆயுத மோதல்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு அமைதி ஏற்பட்டுள்ளது. ஆனாலும், வடக்கு மற்றும் தெற்கு மக்களுக்கு இடையில் சுமூகமான நிலை தோற்றுவிக்கப்படவில்லை. அந்தச் சுமூக நிலையை விரைவிலேயே ஏற்படுத்தி அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று புதன்கிழமை பாராளுமன்ற வளாக மைதானத்தில் இடம்பெற்ற தேசிய நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாம் சுதந்திரமாக முன்னோக்கிப் பயணிக்கின்றோம் என்ற வகையில் இந்த தேசத்தின் வாரிசுகளான எமது பிள்ளைகளுக்கும் எதிர்கால தலைமுறைக்கும் முழுமையான வெற்றிகளைக் கொண்டு வரும் வகையில் சமாதானம் மற்றும் ஐக்கியத்தைப் பலப்படுத்துவதை உறுதி செய்வோம்.

நேர்மை மற்றும் நல்லாட்சியின் ஒளியில் சமாதானம் சுதந்திரம் மற்றும் சுபீட்சத்திற்கான ஒரு எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான உறுதி மொழியில் நாம் இணைந்து கொள்வோம். துப்பாக்கிகள் அமைதியடைந்தாலும் நல்லிணக்கம் இன்னும் இல்லை. 30 வருட போரில் துப்பாக்கிகள் அமைதியடைந்தாலும் இன்னமும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது

இலங்கையில் வறுமையை ஒழிக்க வேண்டியுள்ளதுடன் வாய்ப்புக்களை வழங்க வேண்டியுள்ளது. அத்துடன் வெளிநாட்டு கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளது. இந்த விடயங்களில் பாரிய சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

வடபகுதி மக்களையும் தென்பகுதி மக்களையும் இணைந்து செயற்பட வைக்க முன்னைய அரசாங்கங்கள் தவறி விட்டன. இந்த செயற்பாட்டுக்கு தமது அரசாங்கம் முன்னின்று செயற்படும்.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கு- தெற்கு மக்களுக்கு இடையே சுமூகமான நிலை தோற்றுவிக்கப்பட வேண்டும்: சுதந்திர தின உரையில் மைத்திரிபால சிறிசேன!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com