Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மார்ச் மாதம் வரவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அப்போது யாழ்ப்பாணத்துக்கும் செல்வார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று நரேந்திர மோடி இலங்கை வரவுள்ளார். அதற்கு முன்னர், அதாவது இந்த மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியா செல்லவுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இந்திய மத்திய அரசு முக்கியஸ்தர்களை மேற்கொள்காட்டி “தி ஹிந்து“ செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “நரேந்திர மோடியின் வருகை இலங்கையின் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து ஜெனிவாவில் நடக்கும் கூட்டத்தை ஒட்டியதாகவும் இருக்கிறது. இலங்கை வரும் இந்தியப் பிரதமர் இந்திய அரசாங்கத்தின் 50 ஆயிரம் வீட்டுத் திட்டம், பொருளாதார ஒப்பந்மான 'சீபா', சம்பூர் அனல் மின் திட்டம், என்பவை தொடர்பில் ஆராய்வார். அத்துடன், 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் முக்கியமாக ஆராய்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விஜயத்தின் போது தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் வடக்கு மாகாணத்திற்கும் முக்கியமாக யாழ்ப்பாணத்துக்கும் வருகை தருவார்.” என்றுள்ளது.

0 Responses to இலங்கை வரும் இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணத்துக்கும் செல்வார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com