கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றத்தினையடுத்து, புதிய முதலமைச்சரை இன்னும் சில நாட்களில் அறிவிப்போம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
அத்தோடு, கிழக்கு மாகாண சபையில் புதிதாக அமையவுள்ள ஆட்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பங்கெடுக்குமாறு முஸ்லிம் காங்கிரஸ் அழைத்துள்ளது.
அம்பாறையில் அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
2012ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது தனித்துப் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸூம் தேர்தலின் பின்னர் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்திருந்தன. அதன்போது, முதலமைச்சர் பதவியை 2½ வருடங்களுக்கு பகிர்ந்து கொள்வதென்றும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே, ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய முஸ்லிம் காங்கிரஸ் பொது எதிரணியில் இணைந்திருந்தது. இதனையடுத்து, கிழக்கிலும் ஆட்சிமாற்றத்துக்கான சூழல் ஏற்பட்டது.
ஆயினும், கிழக்கில் எந்தவொரு கட்சிக்கும் முதலமைச்சர் பதவியை விட்டுத் தர முடியாது என்று அறிவித்த முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடனான பழைய ஒப்பந்தத்தின் பிரகாரம் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைக்கின்றது.

0 Responses to கிழக்கின் புதிய முதலமைச்சரை விரைவில் அறிவிப்போம்; கூட்டமைப்புக்கும் அழைப்பு: ரவூப் ஹக்கீம்