பிரதம நீதியரசர் பதவியிலிருந்து தன்மை நீக்கியமை சட்ட விரோதமானது. அது, அரசியமைப்புக்கு உட்பட்டதல்ல என்று மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 43வது பிரதம நீதியரசராக பொறுப்பேற்ற ஷிராணி பண்டாரநாயக்க, 2013ஆம் ஆண்டு ஜனவரி அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தினால் குற்றப்பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து, மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டார். எனினும், தற்போது ஆட்சிக்கு வந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம், மொஹான் பீரிஸின் நியமனம் மற்றும் ஷிராணி பண்டாரநாயக்கவின் பதவி நீக்கம் ஆகியன சட்டவிரோதமானது என கூறி, மீண்டும் ஷிராணியை பிரதம நீதியரசர் பதவியை தொடர அனுமதித்தது.
இந்தநிலையில், கடந்த புதன்கிழமை பதவியேற்ற ஷிராணி பண்டாரநாயக்க, அதற்கு மறுநாள் வியாழக்கிழமை ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து, இலங்கையின் 44வது பிரதம நீதியரசராக கே.ஶ்ரீபவன் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், தன்னுடைய நீக்கம் தொடர்பில் மொஹான் பீரிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியல் அமைப்பிற்கு முரணான வகையில் நான் பணி நீக்கப்பட்டுள்ளேன். நான் இன்னமும் பிரதம நீதியரசர் பதவியிலிருந்து ஓய்வு பெறவில்லை, காரியாலயத்திலிருந்து வெளியேறவும் இல்லை. புற அழுத்தங்கள் காரணமாக என்னை பதவியிலிருந்து சட்டவிரோதமான முறையில் நீக்கியுள்ளனர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to என்னை பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கியமை சட்ட விரோதமானது: மொஹான் பீரிஸ்