Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டெல்லியில், கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் 16–ந் தேதி தனது நண்பருடன் பஸ்சில் சென்ற மருத்துவ மாணவி ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் கற்பழித்தது.

அந்த கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட அந்த மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நாடு முழுவதிலும் கடும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருந்த 6 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களில் ஒருவர் சிறுவன் என்பதால் பின்னர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான். ஒரு குற்றவாளி சிறையில் தற்கொலை செய்து கொண்டார். பஸ்சின் டிரைவர் முகேஷ் சிங் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த திரைப்பட பெண் தயாரிப்பாளர் லெஸ்லீ உத்வின் மற்றும் பி.பி.சி.–4 குழுவினர் இந்த கற்பழிப்பு சம்பவத்தை மையமாக வைத்து ‘இந்தியாவின் மகள்’ என்ற ஆவணப்படத்தை தயாரித்தனர்.

இதற்காக திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் முகேஷ் சிங்கிடம், சிறை அதிகாரிகள் அனுமதியுடன் பேட்டியும் எடுத்தனர். குற்றவாளி முகேஷ் சிங் அளித்த பேட்டி முழுமையாக ஊடகங்களில் வெளியானது.இதை இந்தியாவில் ஒளிபரப்ப தடை விதிக்கபட்டது ஆனால் உலகம் முழுவதும் இந்த ஆவண படம் வெளியானது.

இந்திய ஆண்களை கொச்சைப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு பதிலடியாக இங்கிலாந்தின் மகள் என்ற பெயரில் இந்தியரான ஹர்வீந்தர் சிங் என்பவர் ஆவணப்படம் ஒன்றை எடுத்துள்ளார். அதில் மேற்கு நாடுகளின் பாலியல் பலாத்கார சம்பவங்களை தோலுரித்துள்ளார்.

 இங்கிலாந்தில் மட்டும் ஒரு நாளைக்கு 250 பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த படத்தில் பாதிக்கப்பட்ட 10 சதவீதம் பெண்கள் தங்களது அனுபவங்களை தெரிவித்துள்ளனர் என்கிறார் ஹர்வீந்தர் சிங். இங்கிலா ந்திலும் பெண்கள் பலாத்காரத்திற்கு ஆளாவதற்கு காரணம் பெண்கள்தான் என்று மூன்றில் ஒரு பங்கு ஆண்கள் கருதுகின்றனர். அங்கு பெண்கள் கொலை செய்யப்படும் விகிதம் குறைவாக இருந்தாலும் பலாத்கார சம்பவங்களை தடுக்க முடியவில்லை என்றும் குற்றம் சாட்டுகிறார்.

0 Responses to ’இந்தியாவின் மகள்’ ஆவணப்படத்திற்கு பதிலடியாக ’இங்கிலாந்தின் மகள்’ ஆவணப்படம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com