Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜாதிக ஹெல உறுமய முன்வைத்துள்ள தேர்தல் முறை மறுசீரமைப்பின் பிரகாரம் யாழ் மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 11 ஆக உயரும் வாய்ப்பு உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்கிற ரீதியில் உறுப்பினர்களின் தெரிவு நடைமுறைக்கு வரும் பட்சத்தில் யாழ் தேர்தல் மாவட்டத்திலுள்ள 11 தொகுதிகளுக்கும் ஒவ்வொரு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் வாய்ப்பு வருவாகும்.

யாழ் தேர்தல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு கணக்கெடுப்பின் படி 7 பாராளுமன்ற உறுப்பினர்களே தெரிவாகும் நிலை உள்ளது. ஆனாலும், தொகுதிவாரியான முடிவுகளின் படி அது 11 ஆக அதிகரிக்கம் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இதனிடையே, தொகுதிகளை புதிதாக வரையறுக்கும் எல்லை முறையை தற்போதைக்கு நடைமுறைப்படுத்தக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Responses to யாழ் மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 11 ஆக உயரும் வாய்ப்பு?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com