முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரின் நலம் விசாரிக்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சென்றுள்ளார்.
அவர் இன்றைய தினம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்றுள்ளார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதியுடன் மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
ஊழல் மேசாடி குற்றச்சாட்டின் பேரில் குற்ற புலனாய்வு பிரிவினர் நேற்று முன்தினம் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை கைது செய்தனர்.
கைது நடவடிக்கையையடுத்து அவர் உடல் நலம் குன்றியமையினால் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் நேற்றைய தினம் அவர் விடுத்த கோரிக்கைக்கமைய கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு,
வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தும் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையிலேயே தம்பியின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி இன்று வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.
இதேவேளை நேற்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ முன்னாள் அமைச்சரை பார்வையிடுவதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.
0 Responses to தம்பியை குசலம் விசாரிக்க சென்ற அண்ணை