இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய மீனவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று வடக்கு மாகாண மீனவர்கள் பிரதிநிதியுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்புக்குள் வந்து மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுவது வெறும் வதந்தியே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் வடக்கு மாகாண மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக விசேட கூட்டமொன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தெரிவித்துள்ளதாவது, “வடக்கு மாகாண மீனவ மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் மிகத் தெளிவாக முன்னிக்கிறது. இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழையும் இந்திய மீனவர்களை கைதுசெய்யும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளதுடன், இந்திய மீனவர்களுக்கு எமது கடற்பரப்புக்குள் மீன்பிடிப்பதற்கு இடமளித்துள்ளதாகப் பரப்பப்பட்டிருக்கும் வதந்திகள் உடனடியாகத் திருத்தப்பட வேண்டும்.
வடக்கு மாகாண மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக எனது இந்திய விஜயத்தின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து அவருடன் நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தேன். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக முழு அளவில் இந்தியாவிடமிருந்து ஒத்துழைப்புக் கிடைக்கும் என நம்புகிறேன்.
இலங்கை இந்திய உறவில் எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு இந்தப் பிரச்சினைக்கு தெளிவானதொரு தீர்வை பெற்றுக்கொள்வதே எமது இலக்கு. வடக்கு மாகாண மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வடக்கு அரசியல் பிரதிநிதிகளின் உதவியும் ஒத்துழைப்பும் அவசியம்.” என்றுள்ளார்.

0 Responses to இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவார்கள்: மைத்திரிபால