Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பது தொடர்பிலான அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 08,09 மற்றும் 10ஆம் திகதிகளில் விவாதிக்கப்பட்டு 10ஆம் திகதி நிறைவேற்றப்படும் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

19வது திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு 07ஆம் திகதி சபாநாயகரினால் வெளியிடப்பட இருப்பதாக தெரிகிறது. அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்ட மூலம் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இதற்கெதிராக 18 அமைப்புகள் மற்றும் நபர்கள் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

இவை பிரதம நீதியரசர் கே ஸ்ரீபவன் தலைமையிலான 3 நீதியரசர் குழு முன்னிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமையும், நேற்று வியாழக்கிழமையும் ஆராயப்பட்டது. உயர்நீதிமன்ற தீர்ப்பு ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் அறிவிக்கப்படுவதாக உயர்நீதிமன்றம் அறிவித்தது. தேர்தல் திருத்தச் சட்டத்துடன் 19வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டாலே ஆதரிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூறிவந்தாலும், அடுத்த வாரம் 19வது திருத்தத்திற்கு சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்கும் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ நம்பிக்கை குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் திருத்தத்திற்கான ஏற்பாடுகள் தேர்தல் ஆணையாளர் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அவர், பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகையை 250 ஆக அதிகரிக்க ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளிடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன்பிரகாரம், தொகுதிவாரி முறை மூலம் 150 உறுப்பினர்களும் மாவட்ட மற்றும் மாகாண விகிதாசாரப்படி 75 உறுப்பினர்களும் தேசிய பட்டியலினூடாக 25 பேரும் தெரிவாக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அடுத்த தேர்தலுக்கு முன்னர் புதிய தேர்தல் மறுசீரமைப்பை அமுல்படுத்த முடியாத போதும் அதனை சட்டமாக்க அரசாங்கம் சகல ஒழுங்குகளையும் செய்து வருவதாக குறிப்பிட்ட விஜயதாஸ ராஜபக்ஷ, அடுத்த பொதுத் தேர்தல் விகிதாசார முறையிலே நடத்த வேண்டியிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

0 Responses to 19வது திருத்தச் சட்டம் வரும் 10ஆம் திகதி நிறைவேற்றப்படும்: விஜயதாஸ ராஜபக்ஷ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com