Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுதலை!

பதிந்தவர்: தம்பியன் 11 May 2015

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி. ஆர். குமாரசாமி நான்கு பேரை விடுதலை செய்ய உத்தரவிட்டதோடு, பெங்களூர் சிறப்பு நீதிமன்ற வழக்கையும் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சராக இருந்தபோது ஜெயலலிதா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக, கடந்த 1996ஆம் ஆண்டில், சுப்ரமணியன் சுவாமி கொடுத்த புகாரின் பேரில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில், கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி, ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து.

1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மற்றும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி சொத்துக் குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.

18 ஆண்டுகளாக நடைபெற்ற இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா கடந்த செப்டம்பர் 27-ம் தேதி நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார்.

மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் மற்ற மூவருக்கும் தலா ரூ. 10 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.

இதனிடையே நான்கு பேருக்கும் ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம், ‘மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்' என கால வரையறை நிர்ணயித்தது.

இதையடுத்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டு சி.ஆர்.குமாரசாமி நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஜனவரி 5-ம் தேதி தொடங்கிய‌ மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 41 நாட்களில் நிறைவுபெற்றது.

இதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 11இல் திகதி  குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்படுவதாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை ரத்து செய்து நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டார். 3 நிமிடத்தில் தீர்ப்பை வாசித்துவிட்டு நீதிபதி குமாரசாமி, தனது அறைக்கு திரும்பினார் என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

0 Responses to ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுதலை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com