Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உலகில் மிக அமைதியான நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்தின் சூரிச் நகருக்கு வடமேற்கே வுரென்லிங்கென் என்ற நகரத்தில் சனிக்கிழமை பின்னிரவு 11 மணியளவில் ஓர் வீட்டுக்கு அண்மையில் மர்ம நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில்  துப்பாக்கிதாரி உட்பட 5 பேர் கொல்லப் பட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை ஓர் செய்தியாளர் மாநாட்டில் சுவிஸ் போலிசார் தகவல் அளித்துள்ளனர்.

ஜேர்மன் மொழி பேசும் சுமார் 4500 மக்களினைக் கொண்டுள்ள சிறிய நகரமான வுரென்லிங்கெனில் இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொல்லப் பட்ட அனைவரும் வளர்ந்த இளைஞர்கள் எனவும் துப்பாக்கிதாரி பின்னர் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. இச்சம்பவத்தை  நேரில் பார்த்ததாக எவரும் சாட்சியமளிக்காத நிலையில் துப்பாக்கி வேட்டு சத்தங்களைக் கேட்ட பெயரை வெளியிட விரும்பாத ஒரு நபர் சுவிஸ் பத்திரிகையான பிளிக் இற்கு இச்சம்பவம் குறித்த தகவலை அளித்துள்ளார். இந்த சம்பவத்தில் கொல்லப் பட்டுள்ளவர்களது சடலங்கள் குறித்த வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் கண்டு பிடிக்கப் பட்டதாகப் போலிசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்துக்கும் தீவிரவாதத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என அறிவித்துள்ள சுவிட்சர்லாந்து போலிசார் இதன் பிண்ணனியில் குடும்ப விவகாரம் காரணமாக இருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த நகரம் அமைந்துள்ள ஆர்காவு மாநிலப் போலிசார் இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் விசாரணை ஆரம்பிக்கப் பட்டிருப்பதாக ஊடகங்களுக்குத் தகவல் அளித்துள்ளனர்.

0 Responses to சுவிட்சர்லாந்தில் குடும்ப விவகாரத்தால் துப்பாக்கிச் சூடு?: 5 பேர் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com