பிரேவ் ஹார்ட் - குறித்த சென்ற இதழ் கட்டுரையைப் படித்துவிட்டுப் பேசிய நண்பர்கள் அனைவரும் கமல்ஹாசனுக்கு ஒருமித்த குரலில் 'ஓ' போட்டனர். 'கமல் மாதிரி உண்மையைப் பேசுகிற துணிவு வேறு யாருக்காவது இருக்கிறது என்று நினைக்கிறீர்களா' என்று அவர்கள் கேட்டபோது என்னால் பதில் சொல்ல முடியவில்லை.
'கமல் சொந்த ஆதாயத்துக்காக எதையும் பேசுபவரில்லை........
இனப்படுகொலை குறித்து கமல் பேசியிருப்பதில் எந்த உள்நோக்கமும் இல்லை......
2009லிருந்தே இந்த மனக்குமுறல் கமலுக்கு இருந்திருக்கவேண்டும்.....
இனப்படுகொலை குறித்து கமல் ஒரு திரைப்படம் எடுத்தால், அது தமிழ் சினிமாவில் நிச்சயமாக ஒரு மைல் கல்லாக இருக்கும்'...........
இதே கருத்துக்களை சொல்லிவைத்ததைப் போல் அனைவருமே தெரிவித்தபோது வியப்பாயிருந்தது எனக்கு! கமல் மீது வைத்திருக்கும் நம்பிக்கை அளவுக்கு, வேறெந்த கலைஞன் மீதாவது நண்பர்கள் இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்களா..... தெரியவில்லை. அறுபதாண்டுக்கால திரைப்பட வாழ்க்கையில், கமல் எதைச் சம்பாதித்தாரோ இல்லையோ, நம்பிக்கையைச் சம்பாதித்திருக்கிறார்.
முன்னணிப் பத்திரிகை ஒன்றில் வந்த பேட்டிக் கட்டுரையின் அடிப்படையில்தான் நான் கமல் பற்றி எழுதினேன். தொலைக்காட்சி ஒன்றிலும் இதே கருத்தை கமல், குறிப்பிட்டிருப்பது திரையுலக சகாக்கள் மூலம் பின்னர் தெரியவந்தது.
"ஹிட்லர் செய்த இனப்படுகொலையைப் பற்றி பேசிக் கொண்டேயிருக்கிறோம்.... நம் வீட்டுக் கொல்லைப்புறத்தில் நடந்த இனப்படுகொலையைத் தடுக்க முடியாத நாம் அதைப் பற்றியெல்லாம் பேசி என்ன பயன்?
இதையெல்லாம் சினிமாவில் சொல்லமுடியாது என்கிறார்கள். நான் அப்படிச் சொல்லமாட்டேன்..... வெறுமனே பேசிக் கொண்டேயிருக்கிறோமே என்கிற கோபம் எனக்கு இருக்கிறது......
அவர்கள் பேசும் மொழி வேறு மொழிகூட இல்லை.... அது எனது மொழி.... எனக்குக் கோபம் வருமா வராதா? 'காப்பாத்துங்க' என்று அவர்கள் தமிழில்தானே கதறினார்கள்..... அது எப்படி எனக்குப் புரியாமல் போனது............."
அந்த தொலைக்காட்சிப் பேட்டியில், இப்படியெல்லாம் மனம்திறந்து பேசியிருக்கிறார் கமல். இதையெல்லாம் பார்த்தால், ஆவணப்படம் மூலம் கல்லம் மேக்ரே செய்வதை, திரைப்படம் மூலம் கமல் செய்ய வாய்ப்பிருப்பதாகவே தோன்றுகிறது. உலக நாயகன் என்பதால், மேக்ரேவுடன் சேர்ந்தே கூட களம் இறங்கலாம் கமல். அதற்காக, உத்தம வில்லனுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!
தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு சகலவழிகளிலும் துணைபோன ஐ.நா.வை, போர்க்குற்றம் என்றோ சர்வதேச விசாரணை என்றோ மிகக்குறைந்த வால்யூமிலாவது பேச வைத்துக் கொண்டிருப்பது, கல்லம் மேக்ரேவின் ஆவணப்படங்கள் தான்! 26 மைலுக்கு அந்தப்பக்கம்தானே நடக்கிறது - என்று தன்னைத்தானே ஓரங்கட்டிக்கொண்ட தமிழகத்தின் கோழைத்தனத்துக்கும், 6000 மைல் தள்ளி நடந்த அந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்க மனத்துணிவுடன் முன்நிற்கும் மேக்ரே என்கிற மானுடனுக்கும் இருக்கிற இடைவெளி, காந்திஜிக்கும் கோட்சேவுக்கும் இடையிலான இடைவெளியைக் காட்டிலும் பெரியது.
சோர்வென்பதையே அறியாதவனாய் மீண்டும் புறப்படும் விக்கிரமாதித்தன் மாதிரி, விட்டுக்கொடுப்பதென்ற பேச்சுக்கே இடமில்லாமல் மேக்ரே போராடுவதுதான், உலகில் மனிதம் இன்றைக்கும் இருக்கிறது என்பதற்கான ஒரே ஆதாரம். நாமே ஓய்ந்துவிட்டாலும், மேக்ரே என்கிற அந்த மானுடன் ஓய்ந்துவிடமாட்டான் போலிருக்கிறது!
மேக்ரேவின் போராட்டம் எந்த நிலையில் தொடர்கிறது என்பதைப் பார்க்கும்போதுதான், அதன் வீரியத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.
இனப்படுகொலை நிகழ்ந்து ஆறு ஆண்டுகள் ஆகிறது. அதுதொடர்பான அறிக்கையை வெளியிட இன்னும் நாள் நட்சத்திரம் பார்த்துக் கொண்டிருக்கிறது ஐ.நா. இந்த செப்டம்பரிலாவது இலங்கை தொடர்பான அறிக்கையை மனித உரிமைகள் கவுன்சில் வெளியிடுமா, அல்லது மீண்டும் ஏதாவது காரணத்தைச் சொல்லி சொதப்புமா என்கிற சந்தேகம் ஒருபுறம். அப்படியே ஓர் அறிக்கை வெளிவந்தாலும், அமெரிக்க - இந்திய - சீன எஜமானர்களின் விருப்பத்துக்கேற்பவே அது இருக்கும் என்கிற பயம் மறுபுறம். செப்டம்பரில் வெளியாகும் அறிக்கை 'ஆச்சரியமளிப்பதாக' இருக்கும் என்று நோர்வேயின் எரிக் சொல்ஹெய்ம் சொல்வதைப் பார்த்தால், நீதிக்கான பாதையாக அது இருக்காது என்றே தோன்றுகிறது.
இன்னும் எத்தனை நாள்தான், ஐ.நா. அறிக்கை என்பது நாக்கு வழிப்பதற்கான பேப்பராக மட்டுமே இருக்க முடியும்? இந்தக் கோபம் நம்மைக் காட்டிலும் கல்லம் மேக்ரேவுக்குத்தான் அதிகமாக இருக்கிறது. மைத்திரிபாலா - அமெரிக்கா - இந்தியா - சீனா இடையிலான கள்ளத்தனமான கூட்டு, சர்வதேச விசாரணைக்கு வேட்டுவைத்துவிடும் என்கிற அச்சம் நம்மைப் போலவே இருக்கிறது அந்த மனிதனுக்கு! அந்த உலக மகா சக்திகளின் சதியை முறியடிக்க, அறிவாயுதத்தின் துணையுடன் ஒற்றை ஆளாக மேக்ரே நடத்துகிற போராட்டம், தமிழின வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும். (சுயப் பிரதாபங்களையே எழுதிப் பழகிவிட்ட எமது இனம், இனியேனும் திருந்தக் கடவது!)
சென்ற மார்ச்சில் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்துக்கு முன்பே, ஆட்சி மாற்றத்தைக் காரணம் காட்டி இலங்கைக்கு வாய்தா வழங்கப்பட்டது. சர்வ நிச்சயமாக மோடிகளின் ஆசீர்வாதத்துடனேயே இது நடந்தது. இந்தக் குற்றச்சாட்டை நாம் அழுத்தந் திருத்தமாக எழுப்பினாலும், சு.சு. வைத்ததுதான் சட்டம் என்கிற கொடுஞ்சிறைக்குள் வாழ்ந்துகொண்டிருக்கிற சகோதரிகள் தமிழிசையோ வானதியோ ஒரு எழுத்து கூட இதை மறுத்துப் பேச முயலவில்லை. இதையெல்லாம் அம்பலப் படுத்துகிறாரே என்கிற கோபத்தில் வைகோ மீது பாய்கிறார் மோடி.
'வைகோ உணர்ச்சி வசப்படுகிறார், வெடிக்கிறார், துடிக்கிறார்' என்றெல்லாம் வசன வியாபாரம் செய்துகொண்டிருக்கிறார் இந்த நாட்டின் பிரதமர். உணர்ச்சியும் உணர்வும் இயல்பான மனிதத்தன்மைகள் - என்பதை மோடிகளுக்கு ஒரு தபால் கார்டிலாவது எழுதிப்போடவேண்டும் தமிழிசை. நயவஞ்சகர்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. அதைப் புரிந்துகொண்டுதான், மோடிக்கு அதெல்லாம் இருக்கிறதா இல்லையா என்று கேள்வி எழுப்புவதையே தவிர்க்கிறோம் நாம்.
ராஜபக்சே செய்த இனப்படுகொலையை மூடிமறைப்பதில் சோனியா வகுத்துக் கொடுத்த பாதையில்தான் அடிபிறழாமல் நடக்கிறார் பாரதப் பிரதமர். அதுதான் உண்மை! மோடி போடுகிற கோட்டில்தான் ரோடு போடுகிறது அமெரிக்கா. (இப்படி எழுதுவதற்காக என் மீது பாயும் பெரியவர்கள், வேறு பாதையில்தான் மோடி போகிறாரென்றால் அதை ஆதாரத்துடன் எனக்கு மின்னஞ்சல் செய்யலாம்!)
8 கோடி தமிழர்கள் வாழும் இந்தியா, கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் பேரைக் காப்பாற்றியிருக்க வேண்டும். அதற்கு நேர்மாறாக, அவர்களைக் கொன்று குவித்த மிருகங்களைக் காப்பாற்ற முயல்கிறது. இந்தியாவின் பின்னணி இல்லாமல் இலங்கையைக் காப்பாற்ற அமெரிக்காவாலோ சீனாவாலோ முடியாது. அதனால்தான் இனப்படுகொலையை மூடிமறைப்பதில் இந்தியாவுடன் கூட்டு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். உலகின் ஆகப்பெரிய சக்திகளான இவர்களையெல்லாம் எதிர்த்துக்கொண்டுதான், எமக்காக நீதி கேட்கிறான் மேக்ரே. கொல்லப்பட்ட எம் உறவுகளுக்காகப் போராடுகிறான்.
இது, உலகின் ஆதிக்க சக்திகளுக்கும் மேக்ரே என்கிற மானுடனுக்கும் இடையில் நடக்கிற யுத்தம். இந்த யுத்தத்தில், ஆகப்பெரிய சக்தியாக இருந்தாலும் நயவஞ்சகர்கள் தோல்வியடைவார்கள், மேக்ரேவின் நேர்மையான அறிவுதான் ஜெயிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன் நான். நம்பிக்கை தானே வாழ்க்கை!
மேக்ரேவின் நடவடிக்கைகள் அனைத்தும் சங்கிலித் தொடர் நடவடிக்கைகள். அவை ஒன்றுக்கொன்று முரண்படாதவை. ஒன்றிலிருந்துதான் அடுத்ததைத் தொடங்குகிறான் அவன். அஞ்சாமை துணிவு அறிவுடைமை மூன்றும் இருக்கிறது அவனுக்கு! 'எதிரதாக் காக்கும் அறிவினார்' என்று வள்ளுவம் குறிப்பிடுகிறதே, அந்த அறிவாளியாக இருக்கிறான். பின்னால் நடக்கப்போவதை முன்பே யூகித்து அறிந்து அதற்கான தற்காப்பு நடவடிக்கைகளை முன்பே எடுக்கிறான்.
ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை தான் என்பதை நிரூபிக்கும் 'நோ பயர் சோன்' (போர்த் தவிர்ப்பு வலயம்) ஆவணப்படத்தை சிங்கள மொழியிலும் மொழியாக்கம் செய்திருக்கிறான் மேக்ரே. அதன் பிரதியைக் கொடுக்க முயன்றபோது, மேக்ரேவைச் சிறுமைப்படுத்த இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர முயன்றதெல்லாம் இரண்டே மாதத்தில் பழங்கதை ஆகிவிட்டது. லண்டனில் இருக்கும் இலங்கைத் தூதரக அதிகாரிகள் சென்ற வாரம் மேக்ரேவை நேரில் வரவழைத்து அந்தப் பிரதியைப் பெற்றுக் கொண்டார்கள் என்பதுதான் புதிய செய்தி. ஆம், அந்த மனிதன் அடுத்த கட்ட போராட்டத்துக்குத் தயாராகிவிட்டான்.
மிருகங்கள்தான் தங்களை ஆட்சி செய்திருக்கின்றன - என்கிற உண்மையைப் புரிந்துகொள்ள, சிங்கள மக்கள் 'நோ பயர் சோன்' ஆவணப்படத்தைப் பார்த்தாக வேண்டும். அதுதான் மேக்ரேவின் நோக்கம்.
மைத்திரிபாலா பார்ப்பதற்காக 'நோ பயர் சோன்' ஆவணப்படத்தின் சிங்கள மொழியாக்கப் பிரதியை லண்டனில் உள்ள இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைத்த மேக்ரே, அத்துடன் ஒரு கடிதத்தையும் இணைத்துக் கொடுத்திருக்கிறான். இதுபோன்ற கடிதங்கள் எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்கு அந்தக் கடிதம் ஓர் இலக்கணம்.
"இலங்கையின் வடக்கில் தங்கள் பெயரால் நிகழ்த்தப்பட்ட கொடிய குற்றங்கள் குறித்த உண்மைகளை ஏற்க ராஜபக்சே அரசு தொடர்ந்து மறுத்துவந்தது.....
சிறுவன் பாலச்சந்திரன் படுகொலை தொடர்பான புகைப்படங்களை நாங்கள் வெளியிட்டபோது, அதை அவர்கள் எப்படி மறுத்தார்கள் என்பது உங்களுக்கும் நினைவிருக்கும். இருதரப்புக்கிடையே நடந்த மோதலில் குண்டுபாய்ந்து பாலச்சந்திரன் இறந்ததாகப் பொய் சொன்னார்கள். அதன்பிறகே, ராணுவ கட்டுப்பாட்டில் அவன் இருக்கிற படங்களை நாங்கள் வெளியிட்டோம். அந்த ஆதாரமும் இந்த ஆவணப்படத்தில் உள்ளது.....
ஊடகவியலாளர் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டதை நாங்கள் ஆதாரத்துடன் தெரிவித்தபோதும், மோதலில் அவர் இறந்ததாகப் பொய் சொன்னார்கள். அதன்பின்பே, அவரை ராணுவம் உயிருடன் பிடித்து வைத்திருந்ததற்கான விடியோ ஆதாரத்தை நாங்கள் வெளியிட வேண்டியிருந்தது. அதில் ஒரு சிப்பாயின் முகம் தெள்ளத்தெளிவாக உள்ளது. அதையும் நீங்கள் இந்த ஆவணப்படத்தில் பார்க்க முடியும்.....
முந்தைய ஆட்சியாளர்களின் மறுப்பையும் எதிர்ப்பையும் மீறி, இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கான இந்த ஆதாரங்களை நாங்கள் வெளியிட்டோம். இவை உரிய நிபுணர்களால் பரிசோதிக்கப்பட்ட வலுவான உறுதியான ஆதாரங்கள்.....
நடந்த கொடுமைகளுக்கான பல ஆதாரங்கள் இதில் உள்ளன. நீங்கள் இதைப் பார்த்தால், இலங்கை மக்கள் ஒவ்வொருவருக்கும் இதைப் பார்க்க்கும் ஆர்வம் ஏற்படும். இதை ஒலிபரப்பும் எண்ணம் தொலைக்காட்சிகளுக்கு வரும்.....
உண்மைகள் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. அதைத் தடுத்து நிறுத்த முயலாமல் ஊக்குவியுங்கள். உண்மையின் பக்கமே நில்லுங்கள்.....
குற்றமிழைத்தவர்களைத் தவிர மற்றவர்கள் உண்மைகள் வெளியாவதைப் பார்த்து அஞ்சி நடுங்கவேண்டிய அவசியமில்லையே......"
இதெல்லாம், மைத்திரிக்கு மனசாட்சி இருக்கிறது என்கிற நம்பிக்கையில் மேக்ரே எழுதியிருக்கும் கடிதத்தின் சில பகுதிகள்.
நரேந்திர மோடிக்கு மனசாட்சி இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள, இந்தக் கடிதத்தின் கடைசி வரியையாவது (குற்றமிழைத்தவர்களைத் தவிர மற்றவர்கள்.......) மோடிக்கு மேக்ரே அனுப்பி வைக்கலாம். உண்மையின் பக்கம் நில்லுங்கள் மோடி - என்று கேட்கலாம். 'நோ பயர் சோன்' ஆவணப்படத்தை இந்தியாவும் தடை செய்திருப்பதாலேயே இதைச் சொல்கிறேன். உண்மைகள் வெளியாவதைப் பார்த்து இந்தியா ஏன் நடுங்கவேண்டும்? சோனியாவால் வழிநடத்தப்பட்ட அரசுக்கும் இனப்படுகொலைக்கும் இருக்கிற தொடர்பு அம்பலமாகி விடக்கூடாது என்று நினைக்கிறார்களா?
எந்த இனப்படுகொலையை மூடிமறைக்க இலங்கையும் இந்தியாவும் முயல்கிறதோ, அந்த இனப்படுகொலையை அம்பலப்படுத்தும் திரைப்படமொன்றை உருவாக்க கமல் போன்ற ஒரு மெய்யான கலைஞன் களத்தில் இறங்க வேண்டும். அதே சமயம், தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு ஒற்றை மனிதனாகப் போராடும் கல்லம் மேக்ரேவுக்கு நியாயம் கிடைக்க தமிழ்த் திரைப்பட உலகமும் ஊடகவியலாளர்களும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். 'எம் இனம் அழிக்கப்பட்டதைக் குறித்த ஓர் ஆவணப்படத்தை இந்தியா தடைசெய்வதை எங்களால் அனுமதிக்க முடியாது' - என்கிற குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்.
எம் இனம் அழிக்கப்பட்டது தொடர்பான வலுவான ஆதாரங்களை இருட்டடிப்பு செய்ய ஏன் முயல்கிறாய் - என்று மோடி அரசைப் பார்த்து நாம் கேட்டாகவேண்டும். 'நோ பயர் சோன்' ஆவணப் படத்தை இந்தியாவில் தடையில்லாமல் திரையிட வழிவகுக்க வேண்டும். அதுதான் மேக்ரேக்கு நாம் செய்கிற கைமாறு.
ராஜபக்சே அரசால் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் பேருக்கு மைத்திரிபாலா மூலமோ, மோடி மூலமோ நியாயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை பொய்த்துவிட்டது. ராஜபக்சேவைக் காப்பாற்ற மைத்திரி அரசும், சோனியாவின் இனப்படுகொலை பின்னணியை மூடிமறைக்க மோடி அரசும் முயல்கின்றன. கல்லம் மேக்ரே மட்டும் இல்லையென்றால், இந்த இனத்தை ஒட்டுமொத்தமாகக் கவிழ்த்துவிடுவார்கள் அவர்கள்.
உண்மைகள் வெளியாகிக் கொண்டிருக்கிற இந்த நிலையிலாவது, கமல் மாதிரி, கல்லம் மேக்ரே மாதிரி நாம் பேசியாகவேண்டும்.... நாமென்றால் இங்கேயிருக்கிற ஊடகங்கள்.... இங்கேயிருக்கிற பிரபலங்கள்......
இப்போது பேசாமல் நாம் எப்போது பேசப்போகிறோம்!
-தமிழக அரசியல்-

0 Responses to உண்மையின் பக்கம் நில்லுங்கள் மோடி! - புகழேந்தி தங்கராஜ்