Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேசிய கொடியை அவமதித்ததாக கேரளாவில் பிரபல எழுத்தாளர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

கடந்த ஞாயிறன்று, கேரள மாநிலத்தில் எழுத்தாளர் கமல் சி சவாராவுக்கு எதிராக பாரதீய ஜனதா கட்சி புகார் அளித்ததைத் தொடர்ந்து போலிசாரால் தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டார்.கடந்த மாதம், இந்தியாவில் உள்ள திரையரங்குகளில் காட்சிகள் திரையிடப்படுவதற்கு முன்பும் தேசிய கீதம் ஒளிப்பரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

தேசிய கீதம் ஒலிக்கும் போது அமர்ந்திருந்ததற்காக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சுமார் 20 பேர் வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கும் சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், செய்தியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு எதிராக காலனி ஆட்சிக்கால தேச துரோக சட்டம் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. 

தேசிய கீதத்தை சவாரா தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் அவமதித்ததாக குற்றஞ்சாட்டி பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவு புகார் ஒன்றை கொடுத்ததாக தகவல்கள் கூறுகின்றன.பேஸ்புக் பக்கத்தில் தேசிய கீதம் குறித்து சவாரா வெளியிட்ட சர்ச்சைக்குரிய பதிவு குறித்து விசாரிக்கப்பட்டு கேள்விகளை எதிர்கொண்டு வருவதாகவும், அவர் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் மூத்த போலிஸ் அதிகாரி சதீஷ் பினோ என்.டி.டி.வி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். 

இந்த மாத தொடக்கத்தில், கேரளாவில் உள்ள ஒரு திரையரங்கில் தேசிய கீதம் ஒளிப்பரப்பட்ட போது எழுந்து நிற்காதததால் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்கள் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க வந்தவர்கள். பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஆனால், அரசாங்க ஊழியர் கூறிய உத்தரவுக்கு கீழ்ப்படியாமல், மற்றவர்களுக்கு இடையூறு அல்லது எரிச்சல் ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டைஎதிர்கொண்டுள்ளனர். 

சென்னையில் ஒரு திரையரங்கில், தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காத எட்டு பேர் தாக்கப்பட்டதாகவும், கீழ்தரமாக நடத்தப்பட்டதாகவும் போலிசார் தெரிவித்துள்ளனர். பின்னர், அந்த எட்டு பேர் மீதும் தேசிய கீதத்தை அவமதித்ததாக வழக்குப்வு பதியப்பட்டுள்ளது.

0 Responses to தேசிய கொடியை அவமதித்ததாக கேரளாவில் பிரபல எழுத்தாளர் கைது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com