மாணவர்கள் தோல்வியிலிருந்து பாடம் கற்று வெற்றி பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, தமது மங்கி பாத் உரையில் கூறியுள்ளார்.
மனம் திறந்து பேசுகிறேன் எனும் மங்கி பாத் நிகழ்ச்சியின் 8 வது அத்தியாயத்தில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலம் மக்களுடன் உரையாற்றினார்.அப்போது தேர்வில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார். தோல்வியடைந்த மாணவர்கள் தோல்வியைக் கண்டு துவளாமல், அதிலிருந்து பாடம் கற்று வெற்றி பெற வேண்டும் என்று கூறினார். அப்துல் கலாம் முதலில் விமானியாக வேண்டும் என்று ஆசைப்பட்டார் என்றும், ஆனால் அது அவரால் முடியாத போதும், நாட்டின் குடியரசுத் தலைவராக பிற்காலத்தில் உயர்ந்த இடத்தைப் பிடித்தார் என்றும் மேற்கோள் காண்பித்துப் பேசினார்.
ராணுவ வீரர்களுக்கான ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்கிறத் திட்டத்தை நிச்சயம் மத்திய அரசு நிறைவேற்றும் என்றும், 40 ஆண்டுகளாக இத்திட்டத்தை கிடப்பில் போட்டிருந்த காங்கிரஸ், இப்போது இதை அரசியலாக்குகிறது என்றும் பிரதமர் கூறியுள்ளார்.மேலும்,வறுமைக்கு எதிரான மத்திய அரசின் யுத்தம் தொடரும் என்றும் மோடி தமது உரையில் கூறியுள்ளார்.

0 Responses to தோல்வியிலிருந்து பாடம் கற்று வெற்றி பெற வேண்டும்: பிரதமர்