நேபாளத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இந்திய ஊடகங்களை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.
அந்நாட்டு நிலையை படம்பிடித்து துயரங்களில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவி செய்வதாக கூறி கடும் இம்சைப் படுத்துவதாகவும், இந்தப் பேரிடரை ஒரு நிகழ்ச்சி மேலாண்மை செய்வது போல் படம்பிடித்து உணர்வற்று அச்சூழ்நிலையில் வெறும் ஆதாயத்தை தேடும் வகையிலேயே ஊடகப் பணியை மேற்கொள்கின்றதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதுவும் குறிப்பாக இந்திய இராணுவத்தினதும் இந்திய அரசாங்கத்தினதும் உதவிகளையே தூக்கிப் பிடிக்கின்றன. குடும்பத்தொடர் நாடகங்கள் போல் படம்பிடித்துக் கொண்டே இருக்கின்றன. வேறு எந்த உதவியும் செய்வதாகவும் தெரியவில்லை. ஒரு செய்தியாளர் காயம்பட்டு இரத்தம் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நபருக்கு உதவாமல் அதையே செய்தியாக வழங்கிக் கொண்டிருக்கிறார். இன்னொரு ஊடகவியலாளர், தனது ஒரே மகனை நிலநடுக்கத்தில் புதையுண்டதால் பலிகொடுத்துவிட்டு தவிக்கும் தாயிடம், "இப்போது எப்படி உணர்கிறீர்கள்" எனக் கேட்கிறார். மீட்பு பணியாளர்கள் இன்னமும் வராத இடங்களுக்கு, தேடித் தேடி வரும் உங்களால் ஏன் நீங்கள் வந்த பாதையை அவர்களுக்கு அறியப்படுத்தும் எண்ணம் எழவில்லை. ஏன் உங்கள் கைகளில் உணவுப் பொதிகளையோ, தண்ணீரையோ கொண்டு வந்து அவர்களுக்குத் தர முடியவில்லை என நேபாளத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் சுனிதா சாக்யா, சி.என்.என் தொலைக்காட்சி இணையத்தின் வலைஞர் பக்கத்தில் தனது கடும் ஆட்சேபத்தை வெளியிட்டுள்ளார்.
அதோடு இந்திய ஊடகங்களே திரும்பிச் செல்லுங்கள் எனும் அர்த்தம் அடங்கிய #GoHomeIndianMedia எனும் ஹேஷ்டேக் வசனமும் டுவிட்டரில் மிக வேகமாக பரவி வருகின்றது. ஆனால் இது இந்திய ஊடகங்களை தாக்குதவதற்காக சீன ஊடகங்கள் செய்து வரும் சதி என்கின்றார் இந்திய மூத்த ஊடகவியலாளர் ஒருவர்.

0 Responses to இந்திய ஊடகஙக்ளே திரும்பிச் செல்லுங்கள் : பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட நேபாள மக்கள் காட்டம்!