Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தானம் வழங்குபவர் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு கிராமங்களில் உள்ள விகாரைகளில் மோசடியாக நிதி சேகரிப்பில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது  செய்யப்பட்டுள்ளார்.

ஹற்றன் - நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் வைத்து அவர் 2ம் திகதி மாலை கைது செய்யப்பட்டதாக நோட்டன் பிரிஜ் பொலிஸார் தெரிவித்தனர்.

நீதிமன்றத்தில் தமக்கு நிதி தொடர்பான வழக்கொன்று இருப்பதாகவும் அதில் தாம் வெற்றியடைந்தால் பாரியளவு நிதி கிடைக்கும் எனவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு கிடைக்கும் நிதியை விகாரைகளுக்கு வழங்குவதற்கு எண்ணியுள்ளதாவும்  சந்தேக நபரான பெண் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, சட்டத்தரணிக்கு வழங்க வேண்டிய நிதியையே தாம் சேகரிப்பதாக கூறி அவர் விகாரைகளில் மோசடியான வகையில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். சில விகாரைகளில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான நிதி அந்த பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபரான பெண்ணை ஹற்றன் பதில் நீதவான் எஸ்.இராஜேந்திரன் முன்னிலையில் நேற்று ஆஜர்ப்படுத்தும் போது குறித்த பெண்ணை எதிர்வரும் 6 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஈரியகொல்ல பேராதனைப் பிரதேசத்தைச் சேர்ந்த  பி.டபிள்யூ. சுவர்ணா புஞ்சி குமாரி ஆமி என அடையாளப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணுடன் உடனிருந்த பிள்ளைகளை அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 Responses to விகாரையில் நிதி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது! (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com