Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்குத் தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீட்டு மனு தள்ளுபடியாகிவிடும் என்று தாம் நம்புவதாக பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சாமி கூறியுள்ளார்.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை முடிந்து தீர்ப்புத் திகதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த மேல் முறையீட்டு மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிடும் என்கிற நம்பிக்கை தமக்கு உள்ளதாக சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், வருகிற 2016ம் ஆண்டு தமிழகத்தில் நடைப்பெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறும் என்றும் நம்பிக்கையுடன் கூறியுள்ளார் அவர்.

0 Responses to ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடியாகும்: சுப்ரமணியசாமி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com