Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய நிறைவேற்று சபை மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றை உடனடியாக கலைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), பொதுத் தேர்தலை விரைவாக நடத்துமாறு வலியுறுத்தியுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அங்கு கருத்து வெளியிடும் போதே, கட்சியின் தலைவர் அநுரகுமார திஸ்ஸாநாயக்க மேற்கண்ட கோரிக்கைகளை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "100 நாள் வேலைத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கே கடந்த ஜனவரி 08ஆம் திகதி மக்கள் ஆணை ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டது. தேசிய நிறைவேற்று சபையின் செயற்பாடுகளும் நிறைவடைந்தள்ளன. எனவே, தேசிய நிறைவேற்று சபையையும், பாராளுமன்றத்தையும் உடனடியாகக் கலைக்க வேண்டும்.

ஜனவரி 08 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேனவை மக்கள் ஜனாதிபதியாக தெரிவுசெய்தது ஊழல், செய்தவர்களை தண்டிக்கவும் மீண்டும் இந்த நாட்டில் ஜனநாயகத்தை கட்டியெழுப்பவுமே தவிர ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சியமைத்துக்கொள்வதற்காகவல்ல.

சர்வதிகார ஆட்சியில் இருந்து இந்த நாட்டை ஜனநாயக ரீதியாக கட்டியெழுப்ப வேண்டிய கடப்பாடு ஜனாதிபதிபதிக்குள்ளது. 2010 ஆண்டு கொள்ளை கும்பலான மஹிந்தவின் குடும்பம் மூலம் கட்டியெழுப்பிய பாராளுமன்றத்தை வைத்துக்கொண்டு இந்த நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த முடியாது.

19வது திருத்தத்தை நிறைவேற்றுவதை தடுக்க மஹிந்தவின் கொள்ளைகார கும்பல் பெரும் சதிவேலைகளைச் செய்தது. இவர்களை வைத்துக்கொண்டு நாட்டில் எவ்வாறு நல்லாட்சியை ஏற்படுத்துவது? கட்சி விட்டு கட்சி தாவும் சட்டத்தை 19வது திருத்தத்தில் இருந்து அகற்றினார்கள்.

எனவே, இவர்களை வைத்துக்கொண்டு 20வது திருத்தத்தை, தகவல் அறியும் சட்டத்தையோ, தேசிய கணக்காய்வு சட்டத்தையோ பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது. மக்கள் ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் எதிர்பார்கின்றனர். ஆகவே, தேசிய நிறைவேற்று சபையையும், பாராளுமன்றத்தையும் உடனடியாகக் கலைக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to நிறைவேற்று சபை, பாராளுமன்றம் ஆகியவற்றை உடனடியாக கலைக்கவும்: ஜே.வி.பி கோரிக்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com